உயிரித்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்ய முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அழுத்தங்களை கொடுக்கவில்லை என இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று -26- சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்கு பின்னர் இராணுவத்தினர் நாட்டின் பல பகுதிகளில் தேடுதல்களை நடத்தி சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்தனர். 26 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்றைய தினத்திற்கு மறுதினம் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்டார். இராணுவத் தளபதி என்ற வகையில் றிசார்ட் பதியூதீன் உட்பட பலரை எனக்கு தெரியும். அதேபோல் எனது தொலைபேசி இலக்கமும் அனைவருக்கும் தெரியும்.
றிசார்ட் பதியூதீன் கேட்டதற்கு தேடி அறிந்து கூறுவதாக சொன்னேன். பின்னர் புலனாய்வு பிரிவினரிடம் விசாரித்து அறிந்துக்கொண்டேன். மறுநாள் றிசார்ட் பதியூதீன் என்னை தொடர்புக்கொண்டார்.
ஆம் அப்படியான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினேன். எனினும் அவரை விடுதலை செய்யுமாறு அவர் எனக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.
அவர் மட்டுமல்ல, ஜனாதிபதி, பிரதமர் உட்பட எவரும் எனக்கு அழுத்தங்களை கொடுப்பதில்லை. நாங்கள் சுயாதீனமாக எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி:
இந்த விடயம் தொடர்பில் யாராவது அரசியல்வாதி அல்லது அமைச்சர் அல்லது யாரேனும் நபரொருவர் உங்களிடம் அழுத்தத்தை பிரயோகித்தனரா?
பதில்:
எனககு உங்கள் கேள்வியை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
கடந்த 21.04.2019 அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு நான் இராணுவத் தளபதியாக பதவியை வகித்து வருகிறேன்.இந்தநிலையில் 26.04.2019 அன்று இஷான் முகம்மட் எ்ற ஒரு நபர் தெஹிவளைப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
எனக்கு சரியாக நினைவில்லை அன்றைய தினமா அல்லது அடுத்தநாளா என்று. கெரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார். அரசியல் பிரமுகர்கள் பலரும் என்னுடன் தொடர்பில் இருந்துள்ளனர். பலருடன் எனக்கு பழக்கம் உள்ளது. அந்தவகையில் எனது இலக்கம் அனைவருக்கும் தெரியும்.
அவர் அழைப்பினை எடுத்தபோது குறித்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவவாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா? என்று கேட்டார்?
நான் தெரியாது பலரும் பல இடத்திலும் கைது செய்யப்படுகின்றனர். தேடிப்பார்த்து சொல்கிறேன் என்றேன்.
இரண்டாவது முறை அழைத்தபோது அதைக் கேடடார் அப்போதும் "தேடிக்கொண்டிருக்கிறேன் தெரிந்தவுடன் சொல்கிறேன்" என்று கூறினேன்.
அதன் பின்னர் மூன்றாவது தடவையாக அழைத்தார். "அப்போது அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை பற்றி எனக்கு உறுதிப்படுத்த முடியுமாயிருந்தது. அப்போது நான் கூறினேன்- அவவாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றி ஒன்றரை வருடங்களின் பின்னரே பேசமுடியும் என்று பதிலளித்தேன்.
நான் இவ்வாறு சொல்லக் காரணம் எனக்குள்ள அதிகாரத்தின் படி இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவரை புலனாய்வு பிரிவிற்கு அல்லது பொலிஸ் மூலம் மன்றுக்கு சமர்ப்பித்து விசாரணையின் பொருட்டு ஒன்றரை வருடங்கள் வரை தடு்த்து வைக்க முடியும் என்பதனாலாகும்.
அவர் என்னுடன் மிகவும் சுமுகமான உரையாடலொன்றையே நிகழ்த்தினார். எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம்கொடுக்கவோ அல்லது அதிகாரத்தை பிரயோகிக்கவோ இல்லை.
சில இடங்களில் நான் அவர் என்னிடம் கோரிக்கை விடுத்ததாக குிப்பிட்டுள்ளேன். அது அவர் கடைசியாக அழைத்த போது...
குறித்த நபர் ஒரு உயர்நிலை அதிகாரியொருவரின் மகன். என்ன செய்வது என்று தேடிப்பார்த்து கூறுங்கள் என்றார்.
அது எந்தவிதத்திலும் அதிகாரப் பிரயோகம் அல்ல.
Post a Comment