வந்துவிட்டது பயோ கார்; அறிமுகப்படுத்தினார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்

NEWS
0

சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார்  வீடா (Bio  Car- Vita) என்னும்‪‬  இரசாயனத் திரவப்பொருளை  அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01/08/2016) இடம்பெற்றது.  
அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அதிதிகளாக  அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், கஹடகஹா கிரபைட் நிறுவனத்தின் தலைவர் மஜீத் உட்பட உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top