Top News

கோழிகறி கட்லட் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:
கோழி கறி எலும்பு நீக்கியது – 1/4 கிலோ
உருளை கிழங்கு பெரியது – 1
மிளகு – 1 ஸ்பூன் இடித்தது
ஜீரகம் – 1 ஸ்பூன் இடித்தது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
மல்லி இலை – பொடியாக நறுக்கியது
முட்டை – 2
பிரட் தூள்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
ஆயில்
செய்முறை:
முதலில் கோழி, உருளை கிழங்கு, மஞ்சள் தூள் தேவையான உப்பு ஆகியவற்றை ஒரு (1) குவளை தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைத்து பிறகு தண்ணீர் நீக்கி கோழி மற்றும் கிழங்கை தனியே எடுத்து ஆறவைக்கவும். (இவை குக்கரில் இரண்டு விசிலில் வெந்துவிடும்).
சூடு ஆறியவுடன் இரண்டையும் நன்றாக மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி இழை, மிளகு, ஜீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.
ஒரு பவுலில் முட்டையை அடித்து வைத்து கொள்ளவும். பிரட் தூளை ஒரு பிளேட்டில் கொட்டி வைக்கவும்.
இப்பொழுது உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து கட்லட் வடிவில் தட்டி அடித்து வைத்திருக்கும் முட்டையில் நனைத்து பின்னர் அதை பிரட் தூளில் நனைத்து எண்ணையில் பொறித்தெடுக்கவும்.
ஆயில் அதிகம் விரும்பாதவர்கள் நான்ஸ்டிக் தவ்வாவில் கட்லட்டை பரப்பி கொஞ்சமாக ஆயில் விட்டு சுட்டு எடுக்கவும்.
இந்த கட்லட் தக்காலி ஸாசுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
(குறிப்பு : வீட்டில் பிரட்தூள் செய்ய அடுப்பில் தவாவை காயவைத்து பிரட் துண்டுகளை அதில் பரப்பி முறுகலான பதம் வந்ததும் எடுத்து விடவும் (தீய விடக் கூடாது) ஆறியவுடன் மிக்ஸியில் பௌவ்டர் பன்னி பிரிஜில் வைத்து கொள்ளவும் தேவை படும் பொழுது உபயோகித்து கொள்ளலாம் )

Post a Comment

Previous Post Next Post