பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கொத்தணி முறையிலான வேலத்திட்டத்தினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் இன்று (18) காலை ஆரம்பித்து வைத்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.கலீலுல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது. அட்டாளை ச்சேனை 05ஆம், 09ஆம் பிரிவிலுள்ள ஊர்க்கரை வாய்க்காலை அகழ்ந்து சுத்தம் செய்து மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வழிந்தோடுவதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த வாய்க்கால் சுத்தம் செய்யாமல் இருந்து வந்தமையினால் கடந்த மழை காலங்களில் ஏற்பட்ட வெள்ள நீரினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள 05,08,09,14,15ஆம் பிரிவுகள் மிக அதிகமாக பதிப்படைந்திருந்தமையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதனை கருத்திற்கொண்ட இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார்.
Post a Comment