Top News

சிங்க லே வின் இரத்தம் உறைந்துபோனது!


2015ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் சிங்க லே அமைப்பானது யாரின் பின்புலம் என்று சிறுபிள்ளையிடம் கேட்டால் கூட சொல்லும். அந்தளவுக்கு முன்னர் இருந்த ஆட்சி மீது முஸ்லிம்கள் வைத்துள்ள அவநம்பிக்கை காரணம் முஸ்லிம்களை அளவுக்கதிகமாக சீண்டி கலவரத்தை துாண்டி வேடிக்கை பார்த்தது முன்னர் இருந்த அரசு. பொதுலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய போன்ற அமைப்புகளை குத்தகைக்கு எடுத்து அதனை  மெருகூட்டி ஊடகங்களை விலைக்கு வாங்கி கேளிக்கை செய்தது முன்னர் இருந்த அரசு.
ஆனால் பொதுபலசேனா அமைப்பு அனைத்தையும் விடவும் மாறுபட்டது பாரிய திட்டங்கள் தீட்டி பெரும் வெற்றிபெற்றது சிங்கள பௌத்தர்களிடத்தில் அதிகம் பெயரும்வாங்கியது. காரணம் ஹலாலை நிறுத்தி அடிக்கடி ஊடகங்களிடம் கருத்துக்கள் கூறி பிரச்சாரங்களை முன்னெடுத்து தன்பக்க நியாயத்தை நிரூபித்தது அதற்கு முன்னர் இருந்த அரசும் உத்வேகமாக இருந்து. மன்னர் ஆட்சி மன்னிக்கவும் மஹிந்த ஆட்சி மாறுமென்று கனவிலும் யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. ஆட்சி மாறியது நல்லாட்சி மலரந்தது.
முஸ்லிம்களுக்கெதிராக பல குற்றங்களை ஞானசார தேரர் புரிந்திருந்தாலும் அக்குற்றங்களை வைத்து அவரை கூண்டில் அடைத்தால் நாட்டில் பாரிய முஸ்லிம் - சிங்கள இனக்கலவரம் உருவாகும் என சகுனம் பார்த்து காத்திருந்தது நல்லாட்சி அரசு. அதற்கான நேரம் கிடைத்தது பிரகீதின் வழக்கில் தானாகவே வந்து சிக்கினார் ஞானசார தேரர்.
கைதாக முன்னர் பல முக்கிய டீல்கள் பேசப்பட்டாலும் அவைகள் கைகூடவில்லை, பல போராட்டங்களுக்கும் தீ்க்குளிப்பிற்கும் முஸ்தீபு எடுத்திருந்த போதும் அவைகளும் சாத்தியமற்றுப்போய் கூண்டில் தவிக்கிறார். இவரை எவ்வாறு சிங்கள மக்கள் நம்பினார்கள் ஆதரவளித்தார்கள் என்பதை தேர்தலில் இவர் பெற்ற விருப்புவாக்குகளே காட்டிக்கொடுத்தது. பெயில் கிடைக்காமல் விளக்கமறியலில் இருக்கும் ஞானசார இப்பொழுது போதனைகள் செய்கிறாராம்.
இது ஒருபுறமிருக்க இதற்கிடையில் நல்லாட்சியை குழப்பு மஹிந்த ஆதரவு அட்வடைசிங் கம்பனிகள் ஒரு திட்டத்தை தீட்டியது. சிங்க லே (சிங்க இரத்தம்) இந்தப்பிரச்சாரம் ஸ்டிக்கர் மூலமாகவே ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் டீசேர்டு, கீடெக், கெப் என்று மாறியது. இவற்றையெல்லாம் அச்சிட்டு விநியோகிக்கின்ற சிங்கள கம்பனிகளின் வருமானத்தை ஈட்டவும், மக்களை குழப்பவும் பொதுபலசேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புக்களுடன் கைகோர்த்தது இந்த கம்பனிகள். ஏற்கனவே ஞானசார தேரரின் பிரச்சாரம் சிங்ஹலே என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதாகும். இது தவிர ஒருமுறை ஊடகங்களுக்கு சிங்க லே அமைப்பு எமது இளைஞர் படையணி என்றும் கூறினார். அனைத்தையும் பார்க்கையில் இது திட்டமிட்ட அமைப்பல்ல மாறாக எதேச்சியாக ஒரு குழு ஆரம்பித்ததை இனவாத கம்பனிகளும், பொதுபலசுனாவும் குத்தகைக்கு வாங்கியது என்று சொல்லலாம். ஆனால் தீயாய் பரவிய இந்த பிரச்சாரம் அப்படியே அடங்கிப்போனது காரணம் ஞானசார தேரரின் கைதே இதற்கு முக்கிய கரு!
காலத்திற்கு காலம் மக்களை குழப்ப இனவாதத்தை பரப்ப வெவ்வேறு குழுக்களும் தனிநபர்களும் இப்படியான முயற்சிகளை முன்னெடுப்பது வழமைதான். அதற்கு இப்போது பெரிதும் உரமூட்டுகிறது இந்த சமூகவலைத்தளங்கள். நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஆகிய நாம் இவற்றினை ஆராயந்து அவதானமாக செயற்படுவோமாக!

Post a Comment

Previous Post Next Post