ஏ.எஸ்.எம்.தாணீஸ்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உல்லைக்குளம் பகுதியிலுள்ள காணிகளை உரிமை கொண்டாடுவது தொடர்பில் தோப்பூர் பிரதேச முஸ்லிம்களுக்கும், நல்லூர் பகுதி தமிழ் மக்களுக்குமிடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.தாஹிர் இன்று (20) சனிக்கிழமை இரு தரப்பினரையும் குறித்த காணி பகுதியில் தனித்தனியாக சந்தித்தார்.
இதன் போது மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.தாஹிர் தெரிவிக்கையில் நீண்டகாலமாக தொடர்ந்து செல்லும் இவ் காணி முரண்பாட்டை தீர்க்க வேண்டுமாக இருந்தால் உங்களது காணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உங்களிடமிருக்கின்ற காணி ஆவணங்களை எங்களால் நியமிக்கப்பட்டுள்ள கிராம சேவகர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதுடன் அவ்வாறு யார் சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கின்றார்களோ அவர்களுக்கு பாரபட்சமின்றி காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு பரிசீலணை செய்வோம் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு இரு தரப்பினரும் தங்களிடமிருக்கின்ற காணி ஆவணங்களை நியமிக்கப்பட்டுள்ள கிராம சேவகர்களிடம் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment