யுத்தத்தின் பின்னர் வடக்குஇ கிழக்கில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு ஆணைக்குழு ஒன்று அமைத்து அதனூடாக தீர்வு காணப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
விசேடமாக அப்பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் நிர்வாக ரீதியில் எதிர்கொள்ளும் அநீதி தொடர்பில் அவ்வாணைக் குழு மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந் ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்இ வடக்குஇ கிழக்கிலுள்ள சிங்கள மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் வணிகம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் அங்குள்ள பிரதேச செயலகங்கள்இ வைத்தியசாலைகள் உள்ளிட்ட துறைகளில் சிங்கள மக்கள் இரண்டாம் தரமாக நோக்கப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளன. எனவேஇ சுதந்திர ஜனநாயக நாட்டில் அவ்வாறு பாரபட்சம் காட்டுவது உகந்த செயலல்ல.
நாட்டிலுள்ள சகல பிரதேசங்களிலும் வாழும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். எனவே வடக்குஇகிழக்கில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அதுவிடயத்தில் கவனம் செலுத்தி ஆணைக்குழுவொன்று அமைத்து அம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment