Top News

வவுனியா கல்நாட்டிக்குளம் பகுதி மக்களின் பிரச்சிகளுக்கு மஸ்தான் எம்பியால் தீர்வு



வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்நாட்டிக்குளம் பகுதிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இனத்தலைவருமான கே.காதர் மஸ்தான்  அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையான குடிநீர்ப்பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தீர்வினை பெற்றுக்கொடுத்தார்

அத்துடன் பல வருடங்களாக புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து, குறித்த விடையம் தொடப்பிலும் தாம் கூடிய கவனம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  அம்மக்களிடம் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post