பாறுக் ஷிஹான்-
எதிர்வரும் 20 திகதி நடைபெறவுள்ள யாழ் முஸ்லீம் மக்களிற்கான நடமாடும் நடமாடும் சேவை தொடர்பாக யாழ் பிரதேச செயல செயலாளர் பொ. தயானந்தன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இன்று (18) மாலை வியாழக்கிழமை யாழ் ஒஸ்மானியா கல்லுரியில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றன.
இதன் போது இந்நடமாடும் சேவைக்கு யாழ் பிரதேச செயலகத்திற்கு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள உள்ளதாக யாழ் முஸ்லீம் பிரமுகர்கள் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது முஸ்லீம் பிரதிநிதிகள் சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்,யாழ் மாநகர முன்னாள் உறுப்பினர்களான சுபியான் மௌலவி,சரபுல் அனாம்,யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன தலைவர் ஜமால் முஹமட்,சமூக சேவகரும் ஊடகவியலாளருமான எல்.எம் லாபீர்,சமூக சேவகர் எம்.எஸ் சுஹைல்,பள்ளிவாசல் நிர்வாகிகள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள் உடனிருந்தனர்.
Post a Comment