Top News

விசேட மீள்குடியேற்றப் பதிவிற்கு ஒத்துழைத்த தரப்பினருக்கு நன்றி - ரொசான் தமீம்



பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் விசேட  மீள்குடியேற்றப் பதிவிற்கு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் தெரிவித்துள்ளார்.


யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று  (20) நடைபெற்ற  விஷேட நடமாடும் சேவை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விசேட நடமாடும் சேவையில் யாழ் முஸ்லீம் மக்கள் அதிகமான நன்மைகளை பெற்றுள்ளனர்.
இதற்காக பாடுபட்ட தரப்பினருக்கு எனது கட்சியின் சார்பாக நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நடமாடும் சேவையில்   யாழ்ப்பாணம் பிரதேச செயலக  பிரிவினை சேர்ந்த 1024 குடும்பங்களும்    சாவகச்சேரி பிரதேச செயலகத்தை சேர்ந்த  61 குடும்பங்களும்  பயனடைந்துள்ளன.

இந்த நடமாடும் சேவையில்  யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் பெருந்திரளாக திரண்டுவந்து பங்கேற்றதை அடுத்து இவர்களிற்கான தாகம் தணிக்கும் செயற்பாட்டில் எமது கட்சி போராளிகள் குளிர்பானங்களை வழங்கி உதவியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.அத்துடன் மதிய உணவிற்கான ஏற்பாடுகளும் செய்து கொடக்கப்பட்டன.
மேலும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் விஷேட வேண்டுகோலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் யாழ் மாநகரசபை என்பன இந்த நடமாடும் சேவையினை ஒழுங்கமைத்திருந்தன்.

பிரதேச செயலர்களின் தலைமையில் 224 அரச அதிகாரிகளும் யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் 30 பிரதிநிதிகளும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றப் பதிவுகள்இ காணிப் பதிவுகள்இ வீட்டுத்திட்டப் பதிவுகள்இ வாழ்வாதாரப் பதிவுகள் என்பவற்றையும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் சோலைவரி சார்ந்த விவகாரங்கள் மற்றும் காணி அளவுத்திட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
இவர்களுக்கான உதவிகளை  எமது கட்சி தொண்டர்கள் வழங்கினர்.


இந்நிகழ்வில் எவ்விதமான அரசியல் மற்றும் சமூகப் பேதங்களுமின்றி யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் முழுமையான பங்களிப்புகளையும் ஒத்துழைப்பினையும்  வழங்கியிருந்ததுடன் அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுபடுத்திக்கொள்கின்றேன். 

 இந்த நேரத்தில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கான தங்கள்  பூரண பங்களிப்பை  அனைவரும் வழங்கியமை பாராட்டத்தக்கது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அதிகாரிகளுக்கும் யாழ் மாநகரசபையின் மாநகர ஆணையாளர் உடபட அதிகாரிகள் ஊழியர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் எனது விஷேடமான நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

இம்மீள்குடியேற்ற நடமாடும் சேவையின்  எனது அழைப்பை  ஏற்று இங்கே பெருந்திரளாக வருகை தந்த அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளுக்கும் அவர்களை ஊக்குவித்த அனைத்து யாழ் முஸ்லிம் உறவுகளுக்கும் இதன் வெற்றிக்கு அர்ப்பணிப்போடு உழைத்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

Post a Comment

Previous Post Next Post