அமானா வங்கி, தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சௌகரியமான மாதாந்த கொடுப்பனவுத் திட்டத்தின் அடிப்படையில் சூரியசக்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்ள உதவியளிப்பதற்காக நிதித் தீர்வுகளை வழங்கி வருகின்றது.
அமானா வங்கியின் சூரியசக்தி மின்சாரத்திற்கான நிதியுதவியுடன், வாடிக்கையாளர்கள் சூரியசக்தி கட்டமைப்பிற்குரிய நிதியை பெறலாம். மொத்தப் பெறுமதியில் 75% வரை பெற்று 8 வருடங்களுக்குள் மாதாந்தக் கொடுப்பனவு அடிப்படையில் திருப்பிச் செலுத்தலாம்.
அமானா வங்கியின் சூரியசக்தி மின்சார நிதியளிப்பு திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர், 'எரிசக்தி விலையேற்றத்தை தொடர்ந்து சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத மாற்று எரிசக்தி வளங்கள் மீது நுகர்வோரும், நிறுவனங்களும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாற்று எரிசக்தியை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில், நாம் சூரியசக்தி மின்சார நிதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாடிக்கையாளர்கள் சௌகரியமாக சூரியசக்தி மின்சாரத்திற்கு மாறுவதற்கு துணைபுரியும். வீடுகளுக்கு செலவுச் சிக்கனமான எரிசக்தியை வழங்கும் நோக்குடன், அமானா வங்கி சூரியசக்தி மின்சாரத்திற்கு நிதியளிப்பு தீர்வுகளை முன்வைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மின்சாரக் கட்டணம் குறித்து கவலைப்படாமல் தமது வீடுகளில் தாமே மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்காக சூரியசக்தி மின்சார சட்டகம் ஒன்றை பொருத்திக் கொள்ளலாம். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் சூரிய எரிசக்தியை வாடிக்கையாளர்கள் கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம் என விரும்புகின்றோம். இது அவர்களுக்கு பணத்தை சேமதித்துக் கொள்வதற்கு மாத்திரமின்றி, காபன் வெளியேற்றத்தை குறைத்து பூமியை பாதுகாப்பதற்கும் துணைபுரிகின்றது ' என குறிப்பிட்டார்.
இந்த விசேட சூரியசக்தி மின்சார நிதியுதவியை வழங்குவதற்காக அமானா வங்கி சூரியசக்தி மின்சாரத்தை வழங்கும் ஹய் எனர்ஜி, டிபக், ஜெ லங்கா மற்றும் லங்கா சக்தி போன்ற முன்னணி நிறுவனங்களுடன் கை கோர்த்துள்ளது.
Post a Comment