ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் 65 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் கட்சியின் உறுப்புரிமையும் பறிக்கப்படுமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குருநாகலையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது தேசிய மாநாட் டில் கலந்து கொள்ளும்படி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் மாநாட்டுக்கு வருகை தருகின்றார்களா என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் அவர்களது கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்படுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
Post a Comment