Top News

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சுதந்திர கிழக்கு மாத்திரம் தான் எமக்கான தீர்வு என்பது ஏன்?


வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்து இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் சுமார் 42 சதவீதமாகவும் வடமாகாணத்தில் தமிழர்கள் சுமார் 55 சதவீதமாகவும் இருக்கின்ற இன்றைய நிலையில் தனித்தனி மாகாண சபைகளாக அவை வழிநடத்தப்படுகின்றன
இதனால் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற முஸ்லீம்கள் சுதந்திரமான கிழக்கில் தாம் பெரும்பான்மையாக இருகின்ற சூழலில்  சுதந்திரமாக இயங்க கூடிய முதலமைச்சர்  பெற்று கிழக்கின் அணைத்து செயற்பாடுகளிலும் தம்மை முன்னிருத்தி கொள்ள முடியும்
வடகிழக்கு இணைந்து அதில் முதலமைச்சர் தருவதாக சொல்லும் சம்பந்தன் ஐயாவின் கருத்தில் வடகிழக்கு இணைக்கப்படும் போது ஏற்பட போகும் மாற்றம் தமிழர்களை 68சதவீதமாகவும் முஸ்லீம்களை 28_32 சதவதமானர்களாகவும் மாற்றி பெரும்பான்மை தமிழர் உருப்பினர்களை கொண்ட மாகாண சபையில் முஸ்லீம் ஒருவரை முதலமைச்சராக்கினால் அவருக்கு எவ்வாறு வருக்கு நமது சமுகம் சார்பான விடயங்களை முன்னெடுக்க முடியும்
ஒருவருக்கு பதவி வழங்கி சமுகத்தை பாழ் படுத்தி விடுகின்றதும்
நீண்ட நெடுகால தமது பிரச்சினை கான தீர்வாக இதை நடைமுறைப்படுத்தி வைப்பதுமான நோக்கம் இது ஹக்கீம் சம்பந்தன் காலத்திற்க்கு பிறகு எவ்வாறு சாத்தியம்
இன்று கிழக்கு முதலமைச்சர் முஸ்லீம் வழங்கியதில் தவறு என்று சொல்கின்ற தமிழ் உறுப்பினர்கள் இருக்க தக்க வடகிழக்கு மாகாண முதலமைச்சர் தருவதாக சொல்கின்ற சம்பந்தன் ஐயா எம் சமுகத்தை ஹக்கீமை வைத்து எடை போடுகிறார்
போல் இருக்கிறது இணைந்த வடகிழக்கில் எமக்கான நிலத்தொடர்பற்ற அலகு
எவ்வாறு சாத்தியம்?

முஸ்லீம் பெரும்பாண்மை நிலப்பரப்பு களை கொண்ட பிரதேசங்களை ஒண்றிணைத்தல்
உதாரணமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முஸ்லீம் பெரும்பாண்மை
ஆனால் எமக்கு சொந்தமான பயிர் செய்கை மேட்டு நிலங்கள் எங்கிருகின்றன
திருக்கோவில் ஆலையடிவேம்பு தமன போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் இருக்கின்றன
இதே போல் அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை போன்ற பிரதேசங்களில் பிரச்சினை கள் நிலவுகின்ற இதை தீர்வு காண்பது எவ்வாறு?
வட்டமடு விவசாய காணி திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்டது
ஆள் பலி கொடுத்தும் இன்னும் தீர்த்து வைக்கப்படாத வடு
இது சாத்தியமா?
கரையோர மாவட்டம் ?
இதில் ஒரு விடயமும் இல்லை ஒரு அரச அதிபரை பெற முடியும்
வேறு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை
கிழக்கு முதலமைச்சர் எனும் அரசியல் அதிகாரத்தை இழந்து வெறும் அரச அதிகாரியான அரச அதிபர் ரை பெற வேண்டுமா?
கிழக்கு மாகாணம் முஸ்லீம்களின் பெரு நிலப்பரப்பாகின்ற போது ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை யாக வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு வலிமையும் தைரியமும் பிறக்கும்
தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டுமாக இருந்தால் எங்களை படு குழியில் தள்ளி எம்மை வெறும் குழுவாக ஒடுக்குகின்ற முயற்சி க்கு இடமளியோம்
வடகிழக்கு இணைப்பு முஸ்லீம் களை நசுக்கி இன்னும் எமது இருப்பை இல்லாமல் சென்கின்ற செயற்பாடாகும் 
சர்வதேச அரசியல் தரகர்களின் சதிக்கு
ஹக்கீம் அவர் கட்சியும் இதற்க்கு துணை போனாலும்
எம்மை நாமே ஆள வேண்டும் சுதந்திர கிழக்கு மட்டுமே எமது இலக்கு

Post a Comment

Previous Post Next Post