Top News

முன்னாள் அதிபர் மஹிந்தவின் பின்னால் முபாறக் மௌலவி



முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ எதைச் செய்தாலும் சரியென சமூகவலைத்தளத்தில் அறிக்கை விடும் முபாறக் மௌலவி ஏன் அவர் பின்னாலே செல்கிறார் என உற்றுநோக்கவேண்டியுள்ளது.  காரணம் அவர் தலைவர் என கூறும் கட்சியின் பெயர் உலமாக் கட்சி, அதாவது மார்க்கத்தை பயின்று போதிக்கும் மௌலவிமார்களின் கூட்டுக்கட்சி இது உண்மையில் இந்த பெயரை யாரிடம் கேட்டு வைத்தார் என்ற சி்க்கலும் தோன்றுகிறது.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க முஸ்லிம்கள் முன்னாள் அதிபர் மஹிந்தவை எதிர்த்து மைத்திரிபாலவை ஆதரித்து நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கும் சந்தர்ப்பத்திலும் மாற்றமாகவே செயற்பட்டார். பின்பு நல்லாட்சி அரசின் அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சியின் உறுப்புருமை பெற்றுள்ளார் என அறிக்கை விட்டார். அதன் மூலம் பதவி பெறவும் முயற்சிக்கப்பட்டது. இதுவெல்லாம் அவருடைய தனிப்பட்ட அரசியல் பிரபலத்திற்கு சரியாக இருந்தாலும் சமூகம் என நோக்குகையில் பிழை காரணம் ஒட்டுமொத்த இலங்கை உலமாக்கள் இந்த கட்சி தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படியான கட்சிகள் பெயராலேயே சிங்கள இனவாதிகள் அவர்களும் தங்கள் மதம் சார்ந்து அரசியல் செய்கின்றனர்.  இவற்றை நன்கு சிந்தித்து செயல்படுங்கள். சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்கள் முன்வந்தால் முதலில் அவர்களின் அஜெனடாக்களை அறிந்து அவர்கள்  பின்னால் செல்லுங்கள்.

யார் அறிக்கை விட்டாலும், பிரச்சாரம் செய்தாலும் அவர்பின்னால் செல்வது பிழையான காரியம். செய்வன திருந்தச் செய்.


Previous Post Next Post