Top News

முஸ்லிம்கள் நிதானமாக இருக்க வேண்டிய காலம்தான் இது


1915 முதல் இலங்கை முஸ்லீம்கள் மீதான வன்முறைகளுக்கு பதிவுகள் இருந்தாலும் வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களை அடக்க ஏனைய இனத்தவர்கள் முயற்சி செய்துகொண்டே இருந்தனர் அதற்கான மூல காரணம்,

முஸ்லிம்கள் திறமையானவர்களாக, பணபலம் உள்ளவர்களாக, மொழியறிவும் கல்வியறிவும் உள்ளவர்களாக, உடல் பலம் உள்ளவர்களாக, சாணக்கியம் உள்ளவர்களாக இருந்தமையே மூலகாரணம். ஆனால் ஒருபோதும் முஸ்லிம்கள் இந்த இலங்கை திருநாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை அன்று உலகை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் இலங்கைய கைப்பற்ற முயற்சிக்கவில்லை.

இவைகள் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு இன்று நடக்கும் அரசியல் நாடகத்தை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது முஸ்லிம்கள் மீது வேண்டுமென்று சீணடிவிட்டு அவர்களை உசுப்பேத்தி ஆர்ப்பாட்டங்களை முன்டெடுக்க வைத்துவிட்டு பிறகு அவர்களுக்கு எதிராக வேறுவகை போராட்டங்களை இனவாத ரீதியில் முன்னெடுத்தலை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பது இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட உரு விடயம் அதனை அடிக்கடி சிங்களவர்கள் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய தேவையில்லை, முதலில் சிங்களவர்களை குடிப்பழக்கத்தை விட்டும் அகற்றுங்கள் உதாரணமாக சிங்களவர்கள் மத்தியில் பௌத்த தர்மத்தை பரப்பலாம் அதனை விடுத்து முஸ்லிம் பகுதிகளில் விகாரைகளை அமைத்தல், சிலை வைத்தல் என்பன நகைச்சுவையாக இருக்கிறது. இன்னுமொரு விடயம் இதனை முஸ்லிம்கள் பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் நிதானமாக கையாள வேண்டும்.

-பஹத் ஏ.மஜீத்
Previous Post Next Post