இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத சக்திகளும் மேற்கத்தைய Agenda களும் பணிபுரிந்து கொண்டிருக்கும் சந்தர்பங்களில் எமது மத ரீதியான அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எங்கள் முஸ்லிம் பாடசாலைகள் கல்வி அமைச்சின் கண்காணிப்பில் உள்ளது. அதே போல பள்ளிவாசல்கள் ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் கண்காணிப்பில் உள்ளன, பெரிய அளவிலான அரபுக்கலாசாலைகள், மத்ரசாக்கள் மாத்திரம் ஜம்மியதுல் உலமா மற்றும் அமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது.
ஆங்காங்கே முளைக்கும் சிறிய அளவிலான அரபு கலாசாலைகள். புதிய கொள்கை தாங்கிவரும் மௌலவிமார்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்ரசாக்கள் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு பாரிய சவாலாக அமைந்துவிடுகிறது. இது தவிர்க்கப்பட்டு இதற்கான ஒழுங்குமுறை பேணப்பட்டு அதனை கண்காணித்து அனுமதிகள் குறித்து ஆராய்ந்து பாடத்திட்டங்கள் குறித்து கவனம் எடுத்து இலங்கை அரசுக்கு தெளிவூட்ட வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம்கள் பிரச்சினைக்கு உருவாக்குபவர்கள் அல்ல என்பதை விளங்கப்படுத்த வேண்டும். இதை தவிர்த்து எங்கள் நடவடிக்கை மூலம் எங்களை நாங்களே காட்டிக்கொடுக்க கூடாது.