மாணிக்கமடு தமிழ்க் கிராமத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது இதனை பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டது. மாணிக்கமடு கிராமம் முற்றிலும் தமிழர்கள் வாழும் கிராமமாகும். இங்கு பிள்ளையார் ஆலயம் ஒன்று இருக்கிறது.
இந்த கோயிலைச் சுற்றி தமிழர்கள் வாழ்ந்தாலும், அதனை அடுத்து இருக்கும் நல்லதண்ணி மலைக்கிராமத்தில் அதிகம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இங்கு பள்ளிவாசலும் காணப்படுகிறது. இந்த பள்ளிவாசலின் பெயர் மஸ்ஜிதுல் பலாஹ்,
இவையனைத்தும் இறக்காமம் பிரதேச சபை எல்லைக்குட்பட்டது, கோயில் பள்ளி என்பன இறக்காமம் சார்ந்து வீதிக்கு ஒரு புறம் இருக்கிறது. மறுபுறமே மாணிக்கமடு மலையில் புத்தபகவானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றை உற்று நோக்க வேண்டியிருக்கிறது.
அம்பாரையிலிருந்து தீகவாபி விகாரைக்கு செல்லும் பாதையில் இருக்கும் உயரமான மலையில்தான் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கண்டிய மன்னன் கிழக்கை ஆண்ட காலப்பகுதியில் தீகவாபிய குறுநில மன்னர்களை சந்திக்க இந்தப் பாதையில்தான் வருகை தந்துள்ளதாக வரலாறு சொல்கிறது, அதனடிப்படையிர் பௌர்ணமி தினங்களில் வருகை தந்திருப்பின் இந்த மலையிர் அவர்கள் யாகம் செய்திருக்கலாம்.
ஆக இந்த புத்தர் சிலை வைப்பதாலோ விகாரைகள் கட்டுவதாலோ இந்த மக்களின் அடிப்படை வாழ்வில் எந்தவிதமான மாற்றங்களும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. இங்கு நிலங்கள் பறிபோகப்போவதுமில்லை. இங்கு சிங்களக் குடியுயேற்றங்கள் வந்துவிடப்போவதுமில்லை. இது அரசியலும் அல்ல. மாறாக அவர்களின் பூர்வீகத்தை அவர்கள் பாதுகாக்கின்றனர். நாங்கள் தவறிவிட்டோம் எங்கள் பூர்வீக நிலங்கள், கலாச்சாரங்கள் என்பவற்றை பாதுகாக்க எமது அரசியல்வாதிகள் தவறிவிட்டனர். மாற்றமாக இதனை வைத்து அரசியல் செய்தல் அழகல்ல.
எங்களுக்கு எங்களுடைய மார்க்கம், அவர்களுக்கு அவர்களுடைய மார்க்கம்
-பஹத் ஏ.மஜீத்