Top News

வட்டமடு அரசியல் இனியில்லை; பொன்விளையும் பூமியில் இனி நெல்விளையும்



வட்டமடு வேளாண்மை காணி கடந்த காலங்களில் அரசியலுக்கு பேசப்பட்ட முதல் டிமாண்ட், இந்த காணிகள் அதிகம் அக்கரைப்பற்று மக்களுக்கு இருந்தமையால் அக்கரைப்பற்று மக்களின் வாக்குகளை அள்ளிப்பெற இதை அரசயிலாக பயன்படுத்தினர். ஆனால் இது என்றோ சுமுகமாக பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று காரணம் இங்கு கிட்டத்தட்ட 1200 ஏக்கர் நிலப்பரப்பு அதாவது காடற்ற நிலப்பரப்பு இங்கு மேய்யச்சலுக்கு பயனபடுத்த 500 - 600 ஏக்கர் இருந்தாலும் வேளாண்மை செய்யும் 400 ஏக்கர் பரப்பு ஏன் தமி்ழர்களுக்கு மேய்ச்சக்கு தேவைப்பட்டது? இது வெறும் இனத்துவேச செயல் என தெரிந்து கொண்டும் கூட எமது பூர்வீக பூமியை விட்டுக்கொடுத்து வயிற்றில் மண் அள்ளிப்போட்டு வேடிக்கை பார்த்தோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவிரித்தாடிய காலப்பகுதியிலேதான் இந்த நிலத்தை பறிகொடுத்தோம், ஆனால் யுத்தம் முடிந்து சகாப்தம் நிறைவுற்றாலும் மீள ஏன் இந்த நிலம் கிடைக்கப்பெறவில்லை அது பாரிய அரசியல். சென்ற அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த ஏ.எல்.எம் அதாஉல்லாவாலும் இதனை மீளப்பெற்றுக்கொடுக்க முடியவில்லை, இது வனப்பிரதேசம் என வன இலானா சொன்னாலும் இங்கு புற்கள் தான் இருக்கிறது. ஏன் வனப்பகுதியில்லாத நிலப்பரப்பை வனம் என்று சொல்லவேண்டும் அங்கும் அரசியல் அனைத்தும் நிறைவுற்று நல்லாட்சி அரசு இப்பொழுது மக்களுடன் பேசி, வன இலாகாவுடன் பேசி, அரச அதிபருடன் பேசி தீர்மானம் ஒன்றிற்கு வந்துள்ளது. நீங்கள் சுதந்திரமாக இந்த நிலப்பரப்பில் வயல் செய்ய முடியும். இது மாபெரும் வெற்றி.

இன்று அதாவது 22.11.2016 உத்தியோகபூர்வமாக காணிகள் குறித்த ஆவணங்கள் பற்றியும், ஏனைய விடயங்கள் குறித்து அரச அதிபர் பேசி தீர்மானம் ஒன்றிற்கு வரவிருக்கிறார். 
Previous Post Next Post