Top News

மரியாதை மறந்துவி்ட்ட இலங்கை முஸ்லிம் மாணவர் சமுதாயம்



டிஜிடல் யுகம் சுருங்கிய உலகம் என பேசிக்கொண்டாலும் மனிதர்களுக்கென தனியான அடிப்படை விடயங்கள் மாறாது, மனிதனின் நவீன போக்குகள் காரணமாக அனைத்தையும் மாற்றிவிடலாம் என எண்ணிக்கொண்டு இருக்கிறான் ஆனால் அவன் மாற்ற நினைப்பதெல்லாம் அவனைச்சுற்றியுள்ள உலகத்தைதான் அவனை அல்ல. அவன் ஒருபோதும் அவனுடைய அடிப்படை தன்மைகளை மாற்ற மாட்டான்.
மாணவர்கள் நாட்டின், உலகின் முதுகெலும்புகள் என்று பல அறிஞர்கள் கூறினாலும் அவர்கள்தான் சமூகத்தின் சீர்கேடு சமூகத்தில் பிரச்சினை வரக்காரணம்,

புதிய புதிய சிக்கல்களை துாண்டிவிடுதல் போன்ற பல சர்ச்சைகளை உருவாக்கும் பிரச்சினைக்காரர்களாக தற்பொழுதுள்ள மாணவர் சமுதாயம் காணப்படுகின்றனர். அதற்கான முழுக்காரணம் பெற்றோர்தான். தங்கள் பிள்ளை டாக்டராக, லோயராக வரவேண்டும் என நினைக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளை ஒழுக்கமுள்ள இஸ்லாம் மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக வரவேண்டும் என எண்ணிப்பார்பதில்லை. அதற்கான காரணம் உலக அறிவுதான் முக்கியம் என கருதுகின்றனர் மாறாக இஸ்லாமிய பண்புகளை உள்வாங்கி கொண்ட மாணவனாக வரவேண்டும் என நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

இது தவிர கல்வியை இன்று பணத்திற்கு விற்றுவிட்டனர், பாடசாலைகளில் இலவசக்கல்வி இருந்தும் பாடம் நடாத்த ஆசிரியர்கள் இல்லை, ஒவ்வாரு ஆசிரியரும் மாலைநேர வகுப்புகளை பணத்திற்கு நடாத்துவதால் பாடசாலைக் கல்வி மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.
அரசாங்கம் இலவசக் கல்விக்கொள்கையை வகுத்து அதிக பணம் செலவழிக்கின்றது. ஆனால் அதை தவிர்த்து இன்று டியுட்டோரிகள் ஒரு கொள்கை வகுத்து பணம் புடுங்குகின்றனர்.
ஆக மாணவர்கள் பணம்கொடுத்தால் எதையும் வாங்கலாம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர். இதன் பாரிய இழப்பு என்னவெனில் மாணவர்களிடம் மரியாதை இல்லை, எப்படி இருக்கும் அனைத்தும் பணம்தானே காசு கொடுத்துதானே படிக்கிறோம் எதற்கு மரியாதை? என்று கேட்கின்ற ஆசிரியரை நக்கல் செய்கின்ற பாடசாலையை அவமதிக்கின்ற செயற்பாடுகளை செய்து வருகின்றார்.

இது அதிகமதிகம் முஸ்லிம் பகுதிகளிலே இடம்பெறுகிறது காரணம் எங்களுக்கு தான் எதிலும் சொகுசும் பெருமையும் வேண்டுமே, பாடசாலைக்கு விட்டு மட்டும் போதுமா? மாலை இரவு நள்ளிரவு அதிகாலை எல்லா வகுப்புக்களுக்கும் அனுப்பவேண்டும். பாடசாலை முடித்து கொழும்புக்கு அனுப்பி ஆலட்சம் செலவழித்து பல்வேறுபட்ட படிப்புகள் மாணவர்களை முதலீடு செய்து சீதனம் வாங்கி வெளிநாடு அனுப்பி கற்பிக்கின்ற துர்ப்பாக்கி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது காரணம் எங்கள் சமூகத்தை பொறுத்தவரை ஒரு காதால் வாங்கி மற்றொரு காதால் விட்டுவிடுவார்கள் இதுதான் நிலை, போதனை மற்றவருக்குதான் நமக்கு அல்ல என்ன நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இப்படி சென்றால் ஆயிரம் பலசேனாக்கள் வரும் எம்மை தாக்க, நாங்கள் அடிப்படையில் முஸ்லிம்களாக இல்லாத வரைக்கும் இறைவனின் கருணைப்பார்வை எம்மை வந்து சேராது.


பிரதம ஆசிரியர் பஹத் ஏ.மஜீத்
Previous Post Next Post