Top News

மனிதம் மதிக்கும் முஸ்லிம்கள் - வாருங்கள் பேசலாம்



அழுகிய குப்பைகள் கொட்டப்பட்டது, அவதுாறுகள் பேசப்பட்டது, பைத்தியகாரன் என பட்டம்சூட்டப்பட்டது, வாளும் கத்தியும் தலைக்குப் பாய்ந்தது உடமைகள் பறிக்கப்பட்டது அப்போதும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலில் இருந்து வந்த கூட்டம் நாம். பொறுமையிழந்து மற்றவர்களுக்கு தீங்கிளைக்கும் எங்கள் நாவும் கையும் முயற்சிக்கவே கூடாது. சமாதானத்தின் மூலம் எமது மார்க்கம் பரப்ப பட வேண்டும்.

மேற்சொன்ன சொல்விளக்கத்தை தங்கள் கையடக்கத்தில் வைத்துக்கொண்டு முஸ்லிம் இளைஞர் குழாம் ஒன்று சொற்பதத்தை நிதர்சனமாக்கும் முயற்சியில் இடுபட்டு சமூக வலைத்தள பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர், அதற்கு முதலில் எமது சிலோன் முஸ்லிம் ஊடக வலைத்தளம் சார்பான பாராட்டுக்கள்.

இந்த குழாமிற்கு உங்கள் ஒத்துழைப்பினையும் வழங்கி எதிர்கால சமூகத்தை வழிநடாத்தக்கூடிய இன்னும் பல சந்ததிகளை உருவாக்க முயற்சிப்போம்.

Talk to a Muslim - A platform for Muslims and non Muslims to interact and engage in #LoveXtremism and confront Violent Extremism
Previous Post Next Post