Top News

இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்க திட்டம் தீட்டப்படுகிறதா?


Terrorist Threat என்று சொல்லப்படுகிற சிவப்பு காலம் இதுவாகும் கொடிய யுத்தமொன்று நிறைவடைந்து 6 ஆண்டுகள் சமாதானமாக சென்று கொண்டிருக்கிற இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு இயக்கத்தை உருவாக்கி அதில் குளிர்காய்கிற மேற்கத்தையவாத கருத்துப்பரம்பல்களை எம்மால் காணக்கூடியதாய் இருக்கிறது.
80 களில் தமிழ் மக்களின் உணர்வுகள் துாண்டப்பட்டதன் காரணமாக கிளர்தெழுந்த ஒரு சமூக இயக்கத்தினை வல்லரசு நாடுகள் ஆயுதப்போராட்டமாக மாற்றி அதனை வியாபாரமாக மாற்றி ஆயுதங்களை விற்றும் உணர்வுகளை வைத்து அரசியல் செய்தும் இலாபமீட்டியது.
எல்லாமே முடிந்துவிட்டது என்று இருக்கையில் அல்லது சமாதானமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கையில் அதாவது இடைப்பட்ட 6 வருட காலப்பகுதிகளில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம் சமூகம். இதற்கு முழுக்காரணமும் பொது பலசேனா எனும் மிதவாத (அமெரிக்கவாத) அமைப்பாகும். இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
முன்னர் இருந்த அரசின் காலப்பகுதியில் இனவாதம் கக்கி வந்த இவ்வமைப்பு ( நல்லாட்சி) இப்பொழுதும் தீவிரவாதம் எனும் கொடிய சொல்லை பேசிவருகிறது.
முஸ்லிம் அமைப்புக்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், எமது கிராமங்கள் அனைத்தும் ஒற்றுமையற்று இருக்கிற இப்படியான ஒரு சூழ்நிலையில் எம்மில் தீவிரவாதத்தை விதைப்பது இலகுவான விடயம்.
எமது பள்ளிவாயல்களுக்கு வெளிநாட்டு ஜமாத்துக்கள் வந்து தங்குவது, எமது இளைஞர்கள் பணத்திற்காக எதையும் செய்ய துணிவது, ஒற்றுமையற்ற அமைப்புக்கள், காட்டிக்கொடுக்கும் சிந்தனையுள்ள அரசியல்வாதிகள்…
இப்படி அடுக்கடுக்கான பிழைகளை கண்டுகொண்டுள்ள குழப்பவாதிகள் இவைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் கொடிய அமைப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தினை பொதுபலசேனா என்ற இஸ்ரேல் சிந்தனையுள்ள அமைப்பே இதனை கச்சிதமாக செய்யவிக்கிறது.
பொதுபலசேனா அமைப்பு கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டது.
ஐ.எஸ். அமைப்பின் பாரிஸ் தாக்­கு­தலை ஒத்த ஓர் தாக்­குதல் இன்னும் ஒரு­வ­ருட காலத்­துக்குள் கொழும்பு நகரில் அல்­லது கிழக்கில் ஏற்­ப­டு­வதை எவ­ராலும் தடுக்க முடி­யா­தி­ருக்கும் என பொது­ப­ல­சேனா அமைப்பு எதிர்வு கூறி­யுள்­ளது.
இது எவ்வாறு பொதுபலசேனாவிற்கு தெரியும் என்பதில்தான் இங்கு பிரச்சினை, அல்லாஹ் எமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கட்டும். ஒற்றுமைப்படுவோம். விழிப்பாய் இருப்போம்.

-பஹத் ஏ.மஜீத்
Previous Post Next Post