Top News

காதி நீதிமன்றங்களில் குறைகேள் அதிகாரியாக பெண் உத்தியோகத்தரை நியமிக்க வேண்டும்.



முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் ஜம்மியதுல் உலாமாவின் கவனத்திற்கு.

இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று பல பிணக்குகளை தங்களுக்குள் வைத்துக்கொண்டு தீர்க்க முடியாமலும், தீர்வுகளை கையிலேந்திக் கொண்டு பிரச்சினைகளை வெளியில் சொல்லிக் கொண்டு திரிவதையும் காணமுடிகிறது.

அதில் முக்கியமான ஒன்றுதான் விவாகப்பிரச்சினைகள் முஸ்லிம்கள் உண்மையில் நல்லவர்களாக வாழ்வார்களாயின் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடாது திருமணங்களுக்கு முன் சரியான முறையில் மார்க்கம் போதிக்கப்பட்டிருப்பின் பின்னர் விவாகரத்து இடம்பெறாது. நான்கு சுவர்களுக்குள் நடக்கும் விடயங்கள் வெளியே தெரிய வராது.

விவாகப்பிரச்சினைகளுக்கு தீர்வாக காதி நீதிமன்றங்கள் இருந்தாலும் அங்கு சென்று தங்கள் அந்தரங்க பிரச்சினைகளை முறையிட தயங்கி பிரச்சினைகளை வேறாக்கி விவாகரத்து பெறப்படுகிறது. ஒரு ஆணிடம் காதி நீதிபதி கேள்விகள் கேட்பது நியாயம்தான் ஆனால் ஒரு பெண்ணிடம் பிரச்சினைகள் பற்றி கேட்கும் போது ஒரு சிக்கல் இருக்கிறது அந்தரங்க பிரச்சினைகளை அவள் அந்த நீதிபதியிடம் சொல்ல மாட்டாள் காரணம் வெட்கம் இன்னும் அவர் அதே ஊர்க்காரராக இருப்பார். இப்படி பல பிரச்சினைகள் இருக்கிறது.

இதற்கான ஒரு தீர்வாக ஒவ்வொரு காதி நீதிமன்றங்களிலும் ஒவ்வொரு பெண் குறை கேள் அதிகாரியை நியமிப்பதன் மூலம் சிறந்த ஒரு தீர்ப்பை வழங்க முடியும், குடும்பங்கள் பிரச்சினைகள் படாமல் வாழ்வதற்கு வழிவகுக்க முடியும்.
Previous Post Next Post