Top News

பொதுபலசேனா ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதைச்சாதித்துவிடப்போகிறது?


TRAC எனப்படும் அமைப்பு பொதுபலசேனாவை ஒரு தீவிரவாத அமைப்பாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது. 
பொதுபலசேனா அமைப்பு பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும், ஊடகவியலாளர் மாநாடுகளையும் நடாத்தியு சிங்கள மக்களை திசை திருப்பியிருக்கிறது. இவையனைத்தையும் செய்ய இவர்களுக்கு அதிக பணம் தேவைப்படும் அந்தப்பணம் எங்கிருந்து வந்தது யார் இதனை செய்கிறார்கள் எங்கு திட்டமிடப்படுகிறது என்றெல்லாம் யோசிக்கையில் பாரிய திட்டமாக இது இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

முஸ்லிம்களுக்கெதிராக உலக அரங்கில் பாரிய சதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கை முஸ்லிம்களையும்  தி்ட்டமிட்டு தாக்க ஒருசில சர்வதேச சக்திகள் முனைந்துகொண்டிருக்கிறது, முன்னர் இந்த விடயங்களுக்கு மஹிந்த அரசு உதவி செய்தது ஆனால் நல்லாட்சி உதவி செய்யவில்லை அதற்கு பதிலீடாக நேரடியாக சர்வதேசம் பொதுபலவுக்கு உதவி செய்து கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

இவற்றை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு இந்த பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் பொதுபலசேனா அமைப்பு எதைச் சாதித்து விடப்போகிறது? முன்னர் இருந்த அரசில் இவர்களை கண்டு அஞ்சினர் ஆனால் தற்போதைய அதரசு அப்படியல்ல. கூண்டிற்குள் தள்ளிய அரசு அல்லவா? கொஞ்சம் பயமாக ஞானசார இருந்தாலும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக வேறு திட்டங்கள் தீட்டியிருக்கலாம்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் அனைத்தையும் பொறுமையாக கையாளவேண்டும் மாறாக நாங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் எழுப்புவது ஆரோக்யமானதல்ல. பொறுமையே எங்கள் பேராயுதம்.

பஹத் ஏ.மஜீத்
Previous Post Next Post