பதவிஎன்பது அமானிதம் அது அல்லாஹ் நமக்கு தந்தது, அதன் மூலம் நல்லமல் செய்து ஏனைய சகோதரர்களை மார்க்கத்தின்பால் ஈர்க்க முடியும். முஸ்லிம்கள் மோசமானவர்கள் என்ற நிலைக்கு நமது பதவியை செய்யக்கூடாது.
இன்று அதிக உயர் பதவிகளில் முஸ்லிம்கள் இருப்பது இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு பெருமையாக இருந்தாலும் அதில் ஒரு சில கெடுதிகளும் இருக்கிறது. காரணம் அந்த பதவிகளின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்ற போது முஸ்லிம் என்பதால் முஸ்லிம்கள் கெட்டவர்கள் என் நிலைக்கு தள்ளப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க முஸ்லிம் பகுதிகளில் இருக்கும் அரச அலுவலகங்களில் அதிக முஸ்லிம்களே பணிக்கு இருக்கின்றனர்.
அரச வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல அரச அலுவலகங்களில் முஸ்லிம்கள் வசம் அதிகாரங்கள் இருக்கிறது. உதாரணமாக அரச வைத்தியசாலைகளில் முஸ்லிம் வைத்தியரின் அசமந்த போக்கு முழு முஸ்லிம் வைத்தியர்களையும் பாதிக்கும்.
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் நகரத்தின் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் OPD இல்லாமையினால் அங்கு சென்ற நோயாளி மிகுந்த கவலைக்குள்ளாகிய போது அங்கிருந்த சிற்றுாழியர் கூறியிருக்கிறார் குறித்த வைத்தியர் வீட்டில் இருப்பார் அங்கு சென்று பார்க்கவும் என்று, அவரும் செல்ல அங்கு பில் ரூ. 1000 தாணடியிருக்கிறது. இது திட்டமிட்ட சதியா அல்லது இதுதான் இவர்களின் வழக்கமா இறைவனிடம் பிரார்த்தியுங்கள் காரணம் பதவிகள் குறித்து உங்களிடம் மறுமையில் அதிகம் விசாரிக்கப்படும்.
-பஹத் ஏ.மஜீத்