மட்டக்களப்பு வரும் பொதுபலசேனா பேரணி காத்தான்குடிவரை செல்லலாம்

NEWS


பொதுபலசேனா எனும் அமைப்பு கடந்த அரசாங்கத்தில் எதைச் செய்ததோ அதைதான் இந்த அரசிலும் செய்துவருகிறது. 40 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிவுகள் இருந்தும் கைது செய்யப்படாமை கவலைக்குரியது. நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்லும் இவர்களின் அட்டகாசம் பௌத்த மதத்தை பாதுகாப்பதாக சொல்லிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக டிசம்பர் 3ம் திகதி  மட்டக்களப்பிற்கு பேரணி நடாத்த வரும் பொதுபலசேனா அமைப்பும் அதன் செயலாளர் ஞானசார தேரரும் அன்றைய தினம் பேரணியை காத்தான்குடி கொண்டு  செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த இலங்கைத்திருநாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கையில் இப்படி வேண்டு மென்று குழப்புவது நியாயமற்ற ஒன்று.

6/grid1/Political
To Top