விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பித்த போதும் அதற்குமுந்திய தமிழர் விடுதலைப் பேராட்டங்களின் போதும் முஸ்லிம்கள் பெரிதும் உதவினர் களமுனையில் போராடினர். இந்திய இராணுவம், அன்றைய இலங்கை இராணுவம் அதிகப்படியான முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களை காவு கொண்டனர், ஏன் தமிழீழ விடுதலைப்புலிகளே கொன்றனர் ஏனைய இயக்கங்கள் கொன்றன, முஸ்லிம்களை முஸ்லிம்கள் கொன்றனர் இது வரலாறு.
முஸ்லிம்களிலும் மாவீரர்கள் இருக்கின்றனர் என்ற சேதியை புலம்பெயர் தமிழரும் எமது புதிய தலைமுறையும் மறந்துவிட்ட நிலையில் முஸ்லிம் மாவீரர்கள் 45 பேர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த நிகழ்வில் குறிப்பிட்ட விடயங்களை எமது செய்தியாளர் நுார்தீன் இவ்வாறு கூறுகிறார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்இ
'தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சில முஸ்லிம்களும் மாவீரர்களாகியிருக்கின்றார்கள். 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்.
ஆகவேஇ தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்' என்றார்.