Top News

பாயிஸ் நானா: இனி வர மாட்டார்! மரணம் அவரை சுவைத்துவிட்டது



இன்று நடைபெறவிருந்த முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்திற்கு வருகை தர நேற்று இரவு வரை தயாராக இருந்தவர் சகோதரர் ஹனீபா எம். பாயிஸ்.

அவர் இனி வர மாட்டார். அவரது மரணச் செய்தி நள்ளிரவு வந்து விட்டது.
பாயிஸ் நானா ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உதவிப் பொருளாளர். ஊடகத்துறையில் முதுமானி பட்டம் பெற்ற ஒரு சிறந்த ஊடகவியலாளர். Islamic Perspective எனும் ஆங்கில மொழி மூல சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர். ஆங்கில மொழிப் புலமையுள்ளவர்.
முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்ட காலப் பொருளாளராக இருந்து மிகச் சிறப்பாக பணியாற்றியவர்.

ஆர்ப்பாட்டமில்லாமல், ஆரவாரமில்லாமல் பணி புரிபவர்.
மிகுந்த மார்க்கப்பற்றும் சமூகப் பற்றுமுள்ளவர். சாந்தமானவர். பணிவுள்ளவர். கடினமாக உழைப்பவர். மென்மையான குணம் படைத்தவர். பதவிகளுக்கு ஆசைப்படாதவர். பணிகளில் குறியாக இருப்பவர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாடுகளில் அவர் இரவு பகலாக உழைத்ததற்கு பலரும் சாட்சி.
அவர் முந்தி விட்டார். நாங்களும் அந்த இடத்தை அடைவது சர்வ நிச்சயம். எப்போது என்று யார் அறிவார்?

எப்போதும் மரணத்துக்கு தயாராக இருப்பதுதான் ஒரே வழி!
அதுதான் நிரந்தர வெற்றிக்கான வழி!

யா அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த சுவன பாக்கியத்தை வழங்குவாயாக!
அவரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்குவாயாக!

ஜெம்சித் அஸீஸ்

சிலோன் முஸ்லிம் ஊடகக் குழு சார்பாக அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இறைவன் அவருக்கு சுவனபதியை வழங்குவானாக.
Previous Post Next Post