இலங்கையில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இருமுனை பாரிய எதிர்ப்பு அரசியல் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து அதற்கு நல்லாட்சி என பெயரும் வைத்துள்ளது. இது பெரும்பாக்கியம்தான் காரணம் இப்படி ஒரு அபிவிருத்தியடையாத நாட்டில் நடப்பது சாத்தியமற்றது. இது உலகிற்கு புதிதல்ல கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நல்லாட்சி இடம்பெறுகிறது. ஆனால் இலங்கை சற்று வேறான அரசியல் நிலை.
உலகத்தில் ஓரே ஒரு துாய பௌத்தர்களின் ஆட்சி இங்கு பெரும்பான்மையாக இருக்கிறது. இதுவே பாரிய சவாலாகும் இந்த பௌத்த மதத்தை காப்பாற்ற பல விடயங்களை அவர்கள் செய்ய வேண்டியிருக்கும் புராதன பௌத்த அம்சங்களை பாதுகாக்க அவர்கள் விகாரைகளை விசாலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதுவே நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதகமாக அமையலாம் ஆனாலும் குறித்த மதச் சார்பான விடயங்களை செய்வதற்கு அவர்கள் பின்னிற்க மாட்டார்கள்.
இதனை பெரிதுபடுத்த தேவையுமில்லை, காரணம் முஸ்லிம்களும் தமிழர்களும் தங்களுடைய மத அனுஸ்டானங்களை செய்வதற்கு மிகுதியான சமாதான சூழல் இங்கு காணப்படுகிறது. இது பெரிய விடயம்தான் உலகமெங்கும் இல்லாத மத சுதந்திரம் இலங்கையில் காணப்படுவதால் இந்த இலங்கையை முஸ்லிம் - அல்லது தமிழ் நாடாக்க முயற்சித்தல் கூடாது.
இஸ்லாம் பரிபூரண மார்க்கம் தமது நடவடிக்கைகளால் மற்றையவர்கள் நம்மை பின்பற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையினை நமது நடத்தைகளில் இருந்து செய்துமுடிக்க வேண்டும். பலாத்தகாரமாக கோசங்கள் மூலமாக எந்தவிதமான நடவடிக்கையும் செய்தல் கூடாது. நல்லதொரு காலம் மலரந்துள்ளது. இதில் சகவாழ்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவோம்.