அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் சுபஹ் தொழுது கொண்டிருக்கும் போது வெடிகுண்டு வீசி தாக்கியபொழுது, தனது சகோதரன் துடிதுடித்து மௌத்தாகிய சந்தர்ப்பத்தில் கூட சமாதானாத்தையே இலங்கைவாழ் முஸ்லிம்கள் விரும்பினர். புலிகளை நன் மக்களாக்கி பொதுமக்களாக நடமாட விடுமாறு இறைவனிடம் இரைஞ்சினர்.
அவ்வாறு நல்லிணகத்ததை விரும்பிய இலங்கைவாழ் முஸ்லிம்களை இன்று தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சதி திட்டம் தீட்டப்படுகிறது. முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள் போராடுவார்கள் என்று சூசகமாக சொன்னார்கள் ஆனால் இந்த அரசின் முக்கிய அமைச்சர்கள் இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ் என்று சொல்லுகின்றனர்.
அப்படி என்ன தவறுசெய்தோம் நாம் உங்களுக்கு பலத்தாலும் பணத்தாலும், அறிவாலும் உங்களுக்கு உதவியாகவே இருந்தோம் உங்கள் முன்னோர்கள் எங்களை மதித்தார்கள் நீங்கள் ஏன் மிதிக்கிறீர்கள். எங்களிடம் இருந்து ஹலால் சான்றிதழை பறித்தீர்கள், தொழுகை நடாத்தும் பள்ளிவாசல்களை இழுத்து மூடச் சொன்னீர்கள், பன்றி இறைச்சியை பள்ளிக்குள் துாக்கிவீசினீர்கள் இன்னும் ஏராளமான தவறுகள் செய்தீர்கள். நாங்கள் மௌனிகளாக இருப்பதுதான் காரணமா? எங்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறீர்கள்? நாங்கள் ஆயுதம் ஏந்துவோம் என்றா? அப்படி ஒரு நாளும் நடக்காது. அல்குர்ஆன் மட்டுமே எங்கள் கைகள் ஏந்தும். மனதிற்கொள்ளுங்கள்.
தனிப்பட்ட அரசியல் சர்ச்சைகள் இருப்பின் குறிப்பிட்ட அமைப்புகள் உடன் மோதுங்கள் மாறாக ஒட்டுமொத்த முஸ்லிம்களை இழுக்காதீர்கள். உங்களை யார் சீண்டுகிறாரோ அவர்களை சீண்டுங்கள் அதுதான் உங்களுக்கு சிறந்த வழி.
-பஹத் ஏ.மஜீத்