Top News

அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின் ஈராக்



ஈராக் அறிமுகம் தலைநகர் = [பக்தாத் ] பரப்பு = 438317 சதுர K.M. [169235 சதுர மைல் ] மக்கள் தொகை = 33.42 மில்லியன் [ 2013 ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ] பிரதான சமையம் = [இஸ்லாம் ] பிரதான மொழி = [அரபு மற்றும் குர்திஷ் மொழிகள் ] . அங்கு இருக்கும் இனங்கள் = அரேபியர்கள் 75-80% , குர்திஷ்கள் 15-20 % , கிறிஸ்தவர்கள் 0.8% ஏனையோர்கள் 0.5% [துருக் மோனியர்கள் ,அஸ்ரியர்கள் ] [ஷீஆ முஸ்லிம்கள் 60-75%] [சுன்னி முஸ்லிம்கள் 32-37% ] பிரதான ஏற்றுமதி = சுத்திகரிக்கப்படாத எண்ணெய்கள் . ஏனைய ஏற்றுமதிப் பொருட்கள் = [ விவசாயம் , கோதுமை , பேரீச்சம்பழம் , பார்லி , திராட்சை] . முக்கி நகரங்கள் = [கிர்குக் , இப்றீல் , பஸ்ரா , உம்முல் கஸ்ர் ] வடக்கில் துருக்கியையும் ( 300 km ) கிழக்கில் ஈரானையும் ( 1458 km ) தெற்கில் குவைத்தையும் ( 240 km ) மற்றும் மேற்கில் சவூதி அரேபியாவையும் ( 814 km ) மேற்கில் ஜோர்தான் ( 81 km ) மற்றும் சிரியாவையும் ( 605 km ) எல்லைகளாகக் கொண்டுள்ளது . ஈராக்கின் புனித நகரங்களாக அந்நஜாப் , காஸிமிய்யா , ஸமாரா, மற்றும் கர்பலா ஆகிய நகரங்கள் ஷீஆக்களின் புனித நகரங்களாகக் கருதப்படுகின்றது . அலி ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் நஜாபிலும் ஹுஸைன் ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் கர்பலாவிலும் அமைந்துள்ளது . 02) ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் பின்னணி . ============================== 01) ஈராக்கின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றல் . 02) மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கான ஆதரவையும் பாதுகாப்பையும் திரட்டல் 03) மத்திய கிழக்கில் அமைந்துள்ள அரபு முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுறன்டல் . 04 ) அமெரிக்க ஜனாதிபதியக இருந்த புஷ்ஷின் பதவியை தக்க வைத்வைத்துக் கொள்ளல் 05) உலகில் சக்தி வள நுகர்வில் அமெரிக்காவை தொடர்ந்தும் முன்னணியில் வைத்துக் கொள்ளல் . இப்படியான நோக்கங்களுக்கமைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ்ஷும் இஸ்ரேலாலும் கூட்டாக இணைந்து ஈராக்கில் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸையின் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி 2003 March 20 ல் ஈராக்கை ஆக்கிரமித்தது . ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறி 2003 மார்ச் 20 ல் இருந்து 2007 ஜனவரி வரை சுமார் 4 ஆண்டுகள் ஆக்கிமித்தில் சுமார் 654.463 ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஈராக்கியப் பெண்களை அமெரிக்கா இராணுவம் கற்பை சீராழித்தது . இதை ஜனாயகம் என்று கூவித்திரியும் ஐக்கிய நாடுகள் சபை கை கட்டி வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்த்தது . இந்தத் தகவல்களை பக்தாதில் உள்ள முஸ்தன்சிரியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் John Hopkinson Bloomberg Medical College மும் இணைந்து மேற்கொண்ட கணிப்பீட்டறிக்கையில் வெளியிட்டுள்ளது . அது போதாமல் ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள அபூ கரீப் என்ற சிறையில்வைத்து பல்லாயிரக் கணக்கான வர்களைக் கொன்று குவித்து விட்டு இன்று ஜனநாயகம் என்ற கூவித்திரிகின்றது . இதுதான் அமெரிக்காவின் பஞ்ச தந்திரங்கள். 03) அமெரிக்கா ஆக்கிரமிப்பால் ஈராக் இழந்தது என்ன ? ============================== 01) ஈராக்கின் பொருளாதார வளம் அழிக்கப்பட்டுள்ளது 02) பெரும் மனித வளம் அழிக்கப்பட்டது 03) ஈராக்கின் பழமையான நாகரீகம் அழிந்துவிட்டது 04) இன்று கூட ஈராக்கில் பிறக்கும் பிள்ளைகள் ஊணமாகப் பிறக்கின்றது. 04) முஸ்லிம் சமூகம் இழந்தது என்ன ? ============================== ஈராக்கில் பெரும்பான்மை ஷீஆ சமூகத்தை ஆண்ட சுன்னி முஸ்லிம்கள் ஆட்சியை இளந்துவிட்டது .

கட்டுரை ஆசிரியர் ஹபீசுல் ஹக்
Previous Post Next Post