Top News

தென்கிழக்கு வாழ் விவசாயிகளுக்கு நற்செய்தி சொல்லும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்



ஒரு பல்கலைக்கழகமென்பது அந்த பிரதேசத்தின் அடிப்படை விடயங்களில் தாக்கம் செலுத்தும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி, அரசியல், கல்வி, தொழில்வாய்ப்புகள் போளன்றவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்தி அப்பிரதேசத்தையே மாற்றியமைக்கும் வல்லமை உள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையும் ஆரம்பிக்கும் போது மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் இதே கனவுடன்தான் ஆரம்பித்தார், அக்கனவு ஓரளவுக்கு பூரணமானாலும் இன்னும் பல நடக்காமலே இருக்கிறது எனலாம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தென்கிழக்கு பல்கலையில் ஆரம்பிக்கப்படுகிறது Faculty of Technology இதில் இரண்டு பிரிவுகள் உள்ளது Agriculture மற்றும் Information இதில் ஒவ்வொன்றிலும் 5ற்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளது.

பாடசாலைகளில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் சித்தி பெற்றவர்கள் இந்த பீடத்திற்கு தகுதி பெறுவர், மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகோலும் இந்த பீடம் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் உதவப்போகிறது.காரணம் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்டம் நாட்டின் விவசாய உற்பத்திற்கு 20 வீதம் பங்களிப்பு செய்யும் மாவட்டமாகும்.

நெற்பயிர் உட்பட ஏனைய விவசாய உற்பத்திகளை தயாரிக்க அல்லது புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு பிரதேச வாழ் விவசாயிகளை ஊக்குவிக்க, ஆலோசனை வழங்க இந்த பீடம் உதவியாக இருக்கும் என்கிறார் பல்கலை உபவேந்தர் நாஜீம்.

எதிர்காலத்தில் அம்பாறை சிறப்புத்தேர்ச்சியுள்ள விவசாய உற்பத்திகளை தரக்கூடிய ஒரு மாவட்டமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
Previous Post Next Post