பி.எம்.எம்.ஏ.காதர்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016 ஆய்வுப் பொன்விழா(1966-2016) கொழுப்பு 07லில் உள்ள சுதந்திர சதுக்க இலங்கை மன்ற மண்டபத்தில் இன்று ஞாயிறு(11-122016 மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி 13ஆம் திகதி இரவு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.
ஆரம்பம்
1966ஆம் ஆண்டு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில்தான் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவ்விழாதான் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலில் நடைபெற்ற தமிழ் இலக்கிய ஆய்வு விழாவாகும்.
இந்த விழாவை முன்னின்று நாடாத்திய பெருமை மருதமுனையைச் சேர்ந்த கலாபூஷணம் எஸ்,ஏ.ஆர்.எம்.செய்யது ஹஸன் மௌலானாவையே சாரும். மருதமுனையில் அன்று தெடக்கி வைக்கப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் 50பது ஆண்டு நிறைவின் பொன்விழாதான் கொழும்பில் நடைபெறவுள்ள ஆய்வுப் பொன் விழாவாகும்.
தலைமை
இந்த மாநாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெறவுள்ளது.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு ஆறு அரங்குகளில் நடைபெறவுள்ளது.
இங்கு பேராளர்களாக இலங்கையைச் சேர்ந்த சுமார் 250பது பேரும்,இந்தியா.மலேசியா,அமீரகம் (துபாய்),சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 50பது பேரும் கலந்து கொள்கின்றனர்.இதில் 480பது பக்கங்களைக் கொண்ட ஆய்வுக் கோவையும்,400 பக்கங்களைக் கொண்ட மாநாட்டு மலரும் வெளியிடப்படவுள்ளது.
தொடக்க விழா
தொடக்க விழா 11ம் திகதி மாலை 4.00மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை சுதந்திர சதுக்க இலங்கை மன்ற மண்டபத்தில் செனட்டர் மஷ_ர் மௌலானா நினைவரங்கில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்கின்றார் சிறப்பு அதிதிகளாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,தமிழ் நாடு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உரைகள்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளர் கவிஞர் நாச்சியாதீவு பர்வின் வரவேற்புரை,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தொடக்கவுரை, தலைமையுரை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்.
மேலும் முகம்மது அப்துல்; காதிர் அல் காதிரி (மலேசியா)சங்கைக்குரிய தொலஸ்வல தேரோ,அருட்திரு.பாஸ்டர் ஜோன் லோகநாதன்,சிவசிஸ்ரீ கே.வைத்தீஸ்வரா குருக்கள் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்தவுள்ளனர்.
தமிழ் நாடு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு.முகமதலி, தமிழ் நாடு தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கே.பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
வெளியீடுகள்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மாநாட்டு மலரை வெளியிட்டு வைப்பார் இதை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்வார்.பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆய்வுக் கோவையை வெளியிட்டு வைப்பார் இதை காஸிம் பரீட் ஜாபர்தீன் பெற்றுக்கொளவார்.
விருது வழங்கல்.
இலங்கை,இந்தியா.மலேசியா,அமீரகம் (துபாய்),சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலை இலக்கியத்துறை சார்ந்த 150பதுக்கும் மேற்பட்டவர்களும் சகோதர இனத்தைச் சார்ந்தவர்களும் பல வகைப்படுத்தலில் பொன்னாடை போர்த்தி,விருது.மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அதிதி மற்றும் பிரதம அதிதி உரைகள்
தமிழ் நாடு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அதிதி உரை, பிரதம அதிதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் உப செயலாளர் கவிஞர் நியாஸ் ஏ ஸமதின் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவு பெறுறவுள்ளது.
இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள்
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 2016.12.12ஆம் திகதி பம்பலப்பபிட்டி சுபுட்(ளரடிரன) மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை நடைபெறவுள்ளது.
உரை அரங்கு அங்குரார்;ப்பணம்
கலாநிதி யூஸ_ப் பரைக்கார் உரை அரங்கை அங்குரார்ப்பணம் செய்து வைப்பார் இங்கு 6 அரங்குளில் நிகழ்வுகள் நடைபெறும்.அரங்கு -01 இஸ்லாமும் கலைகளும், அரங்கு -02 சினிமா பற்றி இஸ்லாமியக் கண்ணோட்டம்,அரங்கு-03 எதிரெழுத்து,அரங்கு-04 வாழும் ஆளுமைகள்,அரங்கு-05 சமூக நல்லிணக்கம்,அரங்கு-06 தற்கால இலக்கியம் ஆகிய தலைப்புக்களில் இடம் பெறவுள்ளது.
நினைவரங்குகள்
வி.ஏ.ககபூர்,ரைத்தளாவளை அஸீஸ்,எம்.ஏ.கபூர்,கே.ஏ.ஜவாஹர், எச்செம்பி.மொஹிதீன், மருதூர் கனி, ஆ.கா.அ.அப்துஸ் ஸமது,வித்துவான் எம்.ஏ.றகுமான், நிதிபதி மு.மு.இஸ்மாயில்,எஸ்.எச்.எம்.ஜெ மீல்,அன்பு முகைதீன்-ப.ஆப்தீன் ஆகியோரின் நினைவரங்குகளில் உரைஅரங்குகள் இடம் பெறும்.
அரங்குகளுக்கĬ#3006;ன இணைத் தலைமைகள்
எஸ்.முத்துமீரான்,கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன், பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்,உமா வரதராஜன், பேராசிரியர் சபா.ஜெயராசா,பேராசிரியர் றமிஸ் அப்துல்லா, முனைவர்.ஜே.சதக்கத்துல்லாஹ்,கவி ஞர் ஜவாத் மரைக்கார,;கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரப்,சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரன், கமால் முனைவர் பரிதா பேகம்,திக்குவல்லை கமால் அகியோர் இணைத் தலைவர்களாக தலைமைதாங்கவுள்ளனர்.
இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகள்
2016.12.12ஆம் திகதி மாலை நிகழ்வுகள் சுதந்திர சதுக்க இலங்கை மன்ற மண்டபத்தில் காலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை ‘சுவாமி விபுலாநந்தர் நினைவரங்கில்’பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி கலந்து கொள்கின்றார்.விஷேட அதிதிகளாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா,புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கலா சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோ ஆகியோர் கலந்து சிறப்பிக்வுள்ளனர்.
இங்கு கவிஞர் சோலைக்கிளி வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார் பிரதி அமைச்சர் எம்.எம்.எஸ்.அமீர்அலி தலைமை உரையாற்றுவார் செய்யித் ஹஸன் மௌலானா,தைக்கா நாஸிர் மௌலானா,பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்,முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறும்.
கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுவதுடன் கண்டி சித்திலெப்பை வித்தியாலய மாணவர்களின் நூல் வெளியீடு இடம் பெறவுள்ளது.அத்துடன் வாழைச்சேனை நண்பர் கலை.இலக்கிய வட்டத்தின் நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.இங்கு விஷேட அதிதி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுவார் கவிஞர் என்.நஜ்முல் ஹ_ஸைன் நன்றி உரையாற்றுவார்.
கவியரங்கம்
‘கவிஞர் காமு.ஷரீப்,கவிஞர் ஏ.ஜி.எம்.ஸதக்கா நினைவரங்கில்’
மௌலவி கவிமணி எம்.எச்.எம்.புகாரி தலைமையில் இப்னு அஸ_மத்,அஸீஸ் நிஸார்தீன் மன்னார் அமுதன்,மஸ_றா ஏ. மஜித்,நாச்சியாதீவு பர்வின்,கவிஞர் ஜலாலுத்தீன்(இந்தியா)மர்ஸ_ம் மௌலானா,ஷாமிலத ஷெரீஃப்,சுஐப் எம் காஸிம் ஆகியோர் கவிதை பாடவுள்ளனர்.இக்கவியரங்குடன் 2ஆம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன.
இறுதி நாள் நிகழ்வுகள்
இறுதி நாள் காலை நிகழ்வுகள் 2016.12.13ஆம் திகதி சுதந்திர சதுக்க இலங்கை மன்ற மண்டபம் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 1.00 மணிவரை ‘எஸ்.எம்.ஹனீபா-ஏ.எம்.சமீம் அரங்கில்;’டாக்டர் தாஸிம் அகமது தலைமையில் நடைபெறவுள்ளது.இதில் பிரதம அதிதியாக தமிழ்நாடு மனிதநேய பக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்கின்றார்.
உரைகள்
வரவேற்புரை கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்.தலைமையுரை டாக்டர் தாஸிம் அகமது,ஏனைய உரைகள் பேராசிரியர் சா.உதய சூரியன்,முனைவர் கிருஸ்ணன் மணியம்,இ.கம்பவாரி ஜெயராஜ்,ஏர்வாடி இராதாகிருஷணன்,பேராசிரியர் மோகனதாஸ் இராமசாமி,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,எம்.எச்.ஜவாஹிருல்லா ஹ்(பிரதம அதிதி) கலாபூஷணம் எம்.ஏ.எம்.நிலாமின் நன்றியுரையுடன் காலை நிகழ்வுகள் நிறைவு பெறும்.
மாலை நிகழ்வுகள்-பாடலரங்கம்
மாலை நிகழ்வுகள் 2.30 மணிதொடக்கம் பி.ப.4.00 மணிவரை பாடலரங்கம் ‘எம்.எச்குத்தூஸ்-இசைக்கோ நுஸர்தீன் அரங்கு’இலங்கை இந்தியப் பாடகர்களின் இஸ்லாமியப் பாடல்கள்
மாநாட்டு நிறைவரங்கு
மாநாட்டு நிறைவரங்கு 4.00மணி; தொடக்கம் இரவு 8.00 வரை ‘ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அரங்கு’தலைமை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்,பிரதம அதிதி அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,சிறப்பதிகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்,பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சிறப்பு அதிதி காஸிம் பரீட் ஜாபர்தீன் அகியோர்.
உரைகள்
வரவேற்புரை கவிஞர் அல் அஸ_மத்,தலைமையுரை கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்,சிறப்புரை முன்னாள் அமைச்சர்களான மு.ஹ.சேகு இஸ்ஸதீன்,பஷீர் சேகுதாவூத்,மற்றும் அதிதிகள் உரையாற்றவுள்ளனர்.
மாநாட்டுப் பிரகடனம்
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் துணைத் தலைவர் எஸ்.எம்.என்.எஸ்.ஏ.மர்ஸ_ம் மௌலானா மாநாட்டுப் பிரகடனம் செய்யவுள்ளார், ஆய்வகத்தின் உடகச் செயலாளர் செய்கு இஸ்மாயில் முஸ்தீனின் நன்றியுரையோடு சலவாத் மற்றும் தேசிய கீதத்துடன் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016 நிறைவடையவுள்ளது.
நிகழ்ச்சித் தொகுப்பு
சனூஸ் முகம்மத் பெரோஸ்,ஏ.ஆர்.எம்.ஜிப்றி,புர்கா ன் பீ இப்தீகார்,ஏ.எல்.ஜபீர்,அகமட் எம்.நஸீர்,ஷாமிலா ஷரீப் ஆகியோர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கவுள்ளனர்.