ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை உருவாக்கியவர் மர்ஹும் பெருந் தலைவர் அஷ்ரப் ஆவார்கள் உண்மையில் இதனை அவர் உருவாக்குவதற்கான பின்னனி காரணம் அன்றைய ஆட்சிகாலத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும்பான்மை கட்சிகளில் முக்கிய அமைச்சர்களாக பெயரளவில் இருந்தாலும் கூட அன்றைய சூழ் நிலையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய சவால்களுக்கு அவர்களால் முகம் கொடுக்கமுடியாத சூழ்நிலை இருந்ததே ஆகும்.
இதனால் முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டு அவர்களின் குரல்கள்களும் நசுக்கப்பட்ட சந்தர்பத்தில்தான் முக்கியமான தீர்மானம் ஒன்றை தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மேற்கொண்டார்கள். அந்த தீர்மானம்தான் முஸ்லிம்களின் உரிமைக் குரலாக முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதற்கான அரசியல் கட்சியாக பிரகடனப் படுத்தப்பட்டது இதனூடாகவே நாதியற்று இருந்த இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தனக்கான முகவரியை பெற்றுக் கொண்டதுவே வரலாற்று சாதனையாகும்.
இந்த மக்கள் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் வெற்றி பெறுவதற்கான காரணம் சமூகங்களுக்கிடையில் இருந்த ஏற்றத்தாழ்வு, பிரதேச வாதங்கள் போன்றவற்றை இல்லாதொழித்து சமூகம் என்ற அடிப்படையில் எல்லோரையும் ஒன்றுபடுத்தி தனது போராட்டத்தை ஆரம்பித்ததுவே ஆகும். அப்போது அந்த போராட்ட இயக்கத்திற்குள் இன்று கட்சிக்குள் இருப்பது போன்ற உட்பூசல், பதவி ஆசை போன்ற நோய்த்தாக்கம் இருக்கவில்லை அதனால்தான் வீரியம் கொண்டு அன்று இக்கட்சி செயற்பட்டது.
ஆனால் எப்போது இந்த இயக்கம் அரசியல் ரீதியாக அங்கிகாரம் பெற்றதோ அன்றிலிருந்து இந்த பதவி ஆசை எனும் நோய் சிலரைப் பீடித்துக் கொண்டது. அந்த நோய் அன்று தொடக்கம் இன்று வரை சிலரை பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
1988 இல் வடகிழக்கு இணைந்த பிற்பாடு முதலாவது நடந்த மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது அத் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு உயிர் அச்சுருத்தல் இருந்த காரணத்தினால்தான் இந்த அரசியல் அதிகாரத்தை சூசகமாக கையாண்டு பெருந் தலைவர் மர்ஹூம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஆரம்பத்தில் இத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிலர் கருத்து முரண் பட்டிருந்தாலும் பெருந் தலைவரின் சாணக்கிய நகர்வால் 17ஆசனங்களை இக் கட்சி குறித்த தேர்தலில் பெற்றது. இருந்தும் அத் தேர்தலுக்கான நபர்களை தலைமை நியமிக்கும் போது தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு சிலர் அழுத்தங்களையும் பிரயோகித்தார்கள்.
அன்றில் இருந்து பதவிக்கான போட்டியும்,பிரதேச வாதமும் தலைமையை சூழ்நிலைக் கைதியாக மாற்றிக் கொண்டது ஒரு சிலர் தங்களின் அபிலாசைகளை இக் கட்சியினூடாக நிறைவேற்ற தந்திர உபாயங்களை மேற் கொண்டு தங்களுக்குள் குழுக்களை உருவாக்கி அதனூடாக தலைமைக்கு நெருக்குதலை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் அது எதுவும் மக்களிடத்தில் எடுபடாதவிடுத்து கட்சியையும், தலைமையையும் விமர்சித்து படிப்படியாக ஒரு சில அடிவருடிகள் கட்சியை விட்டு வெளியேறிச் செல்லும் நிகழ்வுகளும் ஆரம்பமானது.
இவ்வாறான பதவி மோகம் கொண்ட ஒரு சிலரின் செயற்பாடுகலால்தான் அன்றும் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வது தடையாக அமைந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதாவது முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக செயற்பட்டபோதும் அதனை தடுப்பதற்காக பேரின ஆட்சியாளர்கள் கையான்ட உக்தியால் கட்சியில் தலைவருடன் முரண்பட்டவர்களும் தலைமையால் நீக்கப்பட்டவர்களும் பேரின வாத அரசியல் வாதிகளின் நப்பாசைக்கு சோரம் போனார்கள்.
இதற்காக அவர்களுக்கு பதவி, அதிகாரங்களை வழங்கிய பேரினவாத அரசியல் கட்சிகள் அவர்களினூடாக முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளை குழப்பி முஸ்லிம் காங்கிரஸில் இருந்து முஸ்லிம் மக்களை சற்று தூரமாக்கி அவர்களின் ஒற்றுமையை சீர் குழைத்து முஸ்லிம்களின் உரிமை குரலை நசுக்குவதற்கான செயற்பாடுகளை இவர்களை கொண்டு கட்சிதமாக முன்னெடுத்தார்கள்.
இவ்வாறான கட்சிக்கு எதிரான செயற்பாடுகள்,தலைமைக்கு எதிரான விமர்னங்கள் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் காலம் மட்டும் இருந்ததல்ல அன்றைய பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கால கட்டத்திலயே இருந்துள்ளதை எம்மால் இங்கு தெட்டத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
அதாவது அன்று பேரினவாதிகளிடமிருந்த முஸ்லிம்கள் தொடர்பான கெடு பிடிகள், கட்சிக்குள் இருந்து பதவி மோகத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் பல்வேறு சவால்கள் இதன் போது தலைவருக்கு பக்கபலமாக இருந்து அத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்தவர்தான் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கிம் என்றால் மிகையாகாது.
இவ்வாறு அன்று தொடக்கம் இன்று வரை கட்சிக்கு சவாலாக உறுவெடுத்து வருபவர்கள் யாவரும் கட்சியில் இருந்து கொண்டு பதவிகளை எதிர்பார்ப்பவர்களும், பதவிகளுக்காக கட்சியை விட்டு வெளியேரிச் சென்றவர்களின் செயற்பாடுகளுமே காணப்படுகின்றது.
இன்று கட்சியை விட்டு வெளியேறிச் செல்பவர்கள் தற்போதைய தலைவரின் நடவடிக்கை காரணமாக தான் தாங்கள் வெளியேறிச் செல்வதாகவும் மர்ஹும் அஷ்ரப் காலத்தில் கட்சி சிறப்பாக இருந்ததாகவும் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையை பொறுப்பெடுத்த பிற்பாடுதான் இவ்வாறான உட் பூசல்கள் கட்சிக்குள் ஏற்பட்டதாகவும் வரலாற்றை மறைத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் மக்களை ஏமாற்ற முற்படுவது மாத்திரமின்றி மக்களிடத்தில் பெருந் தலைவர் அஷ்ரப் தொடர்பாக மக்களிடம் இருக்கும் அனுதாபங்களை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதற்காக பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களை பற்றியும் அவர் காலத்தில் கட்சிக்குள் இடம் பெற்ற செயற்பாடுகளை சரிவர அறிந்திராதவர்களுக்கும் இவர்கள் தாங்கள் அஷ்ரப் அவர்களின் கொள்கையில் இருப்பதாக மக்களிடத்தில் காட்டி மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் நோக்கம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை விமர்சிப்பதும்,கட்சியை சின்னபின்னாமாக்குது மாத்திரமே அன்றி வேறல்ல என்பதை பல வரலாற்ராசியர்கள்,நடு நிலையான சிந்தனையாளர்கள் அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள்.
இவர்களும் அன்று பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களிடம் பதவியை எதிர்பார்த்து அது தங்களுக்கு கிடைக்காது போன போது தலைமையை குறை சொல்லி கட்சியை விட்டு வெளியேறிச் சென்றவர்கள் போன்றுதான் இவர்களும் இன்று தலைவர் ரவூப் ஹக்கிமிடம் பதவியை எதிர்பார்த்து அது கிடைக்காதவிடுத்து பேரின வாத அரசியல் கட்சிகளுக்கு சேர்ந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸை அழிக்கும் ராஜ தந்திரத்துக்கு துணை போய் பதவிகளை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இவ்வாறான இவர்களின் செயற்பாடுகளால் தான் இன்றும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அளவு விரிசல் ஏற்பட்டுள்ளது இந்த விரிசலை நாம் கலைந்தெறிந்து முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரே கட்சியான முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தி அதன் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுப்போம்.
சிலோன் முஸ்லிம் வாசகர்
எம்.என்.எம்.யஸீர் அறபாத், ஓட்டமாவடி (கல்குடா)