Top News

முஸ்லிம் பிரதேச டிஸ்பன்சரிகளில் இடம்பெறும் மாத்திரை வியாபாரம்




நோய் எம்மை பீடித்தால் வைத்தியரை நாடிச்செல்வது வழமை குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் அதிக பணபலம் உள்ளவர்கள இதன் காரணமாக அரச வைத்தியசாலையில் நோய்க்கு நிவாரணி தேடி செல்வது குறைது இது 100க்கு 10 சதவீதம் எனலாம், 10 சதவீதமான வர்க்கத்தினரே அரச வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அரச வைத்தியலாசலைகளுக்கு செல்லாமல் இருப்பதற்கான காரணம் காலதாமதம், பொடுபோக்கான ஊழியர்களின் செயல்பாடு வேண்டா வெறுப்பிற்கு செயற்படும் வைத்தியர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. இதன் காரணமான தனியார் வைத்தியசாலைகளையும், வைத்தியர்களின் பிரத்தியேக வைத்தியரை நாடிச் செல்கிறோம்.

இந்த தனியார் வைத்தியசாலைகளிலும், பிரத்தியேக வைத்தியர்களிடமும் நாங்கள் நோயை சொல்கிறபோது அடுக்கடுக்காக அவர்கள் மாத்திரைகளை எழுதி ஒரு துண்டுச் சீட்டு தருகின்றனர், பின்னர் அந்த வைத்தியசாலையிலோ அல்லது பாமசியிலோ குறிப்பிட்ட மாத்திரைகளை நாங்கள் வாங்குகிறோம். இந்த மாத்திரைகள் எந்த கம்பனி தயாரிக்கிறது, எதற்காக வழங்கப்படுகிறது இதனால் வரும் சைட் எபக்டுகள் என்ன ஏன் இவ்வளவு மாத்திரைகள் என்று ஒருபோதும் நாங்கள் கேட்டுவிடப்போவதில்லை காரணம் எங்களுக்கு நோய் நின்றால் சரி, குறி்ப்பாக கர்ப்பவதிகளுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் அடிக்கடி நோய்கள் வரும் இதற்கு நுாற்றுக்கணக்கில் மாத்திரைகளை அவர்கள் உட்கொள்கின்றனர் இது குழந்தையை பாதிக்குமா? அல்லது இதன் பக்கவிளைவுகள் என்ன என்பது பற்றி தெரியாது.

அண்மைக்காலமாக பிறக்கின்ற 90 சதவீதமான பிள்ளைகள் ICUவில் வைக்கப்படுகிறது, பலவகையான நோய்கள் என்று சொல்லப்படுகிறது, கர்ப்பகாலத்தில் அளவுக்கதிகமாக மாத்திரை உட்கொண்டாலும் இப்படி குழந்தைக்கு நோய்கள் வரலாமென வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஒருபுறமிருக்க மன அழுத்தம் காரணமாக பல நோய் அறிகுறிகள் ஏற்படுமாம் அதற்காக பக்கற் கணக்கில் மாத்திரை உட்கொள்ள தேவையில்லை அது பக்கவிளைவுகளை தரும் என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இவைகள் ஒருபுறமிருக்க இந்த மாத்திரை வியாபாரம் தொடர்பில் பார்க்கலாம்.

தனியார் வைத்தியசாலைகளின் முன்றலிலோ அல்லது வைத்தியர்களின் டிஸ்பன்சரி முன்றலிலோ சொகுசு கார்களையும் டை கட்டிய ஆபிசர்களையும் நாங்கள் பார்த்திருப்போம் அவர்களிடம் ஒரு பேக் அல்லது மாத்திரையின் சாம்பிள்கள் இருக்கும் இதனை நீங்களும் கண்டிருக்கலாம். இவர்கள்தான் Medical Representative மாத்திரை விற்பனை பிரதிநிதிகள் இவர்கள் செய்வது என்ன? வைத்தியர்களிடம் வந்து காலில் விளாக்குறையாக மண்றாடி தங்கள் கம்பனியின் மாத்திரையை புறமோட் செய்யுங்கள் உங்களுக்கு கமிசன் தருகிறோம் அல்லது குளிர்பானப்பெட்டி, ரீ.வி, வோசிங் மெசின் அல்லது போன் தருகிறோம் எனக்கூறி வைத்தியரை தங்கள் வலைக்குள் சிக்கவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது வியாபார யுக்தியாக இருந்தாலும் எங்கோ பிழை நடப்பதுபோல தெரிகிறது. அண்மைக்காலமாக பக்கவிளைவான நோய்கள் அதிகம் சமூகத்தில் அதிகரித்து காணப்படுகிறது.


இவைகள் பற்றிய அறிவு அல்லது இவைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் எவையும் எம்மிடம் இல்லை, காரணம் பிரச்சினை எங்களுக்கு அல்லவே என்று துாரமாகிறோம் நாங்கள் கேட்காதவரை சமூகம் கேட்காது, காரணம் சமூகம் என்பது நாமே, எம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விழிப்பாக இருங்கள் மற்றவரையும் விழி்ப்புணர்வு செய்திடுங்கள்.

சமூக விழிப்புணர்வுக்கான பத்தியே இது, இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படம் காப்பக படமே, எந்தவொரு தனி நபர் மற்றும் கம்பனிகளை குறிப்பிடவில்லை.

பஹத் ஏ.மஜீத்,
பிரதம ஆசிரியர்  
Previous Post Next Post