Top News

மனிதப் படுகொலையின் விளிம்பில் சிரியா தேசம் நெற்றிக்கண் பார்வை



சிரியா தென் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ளத ஒரு நாடு. இது வடக்கில் துருக்கியையும் மேற்கில் லெபனானையும் மத்திய தரைக் கடலையும்  தெற்கில் பலஸ்தீனையும் ஜோர்தானையும் கிழக்கில் ஈரானையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது . 

இதனுடைய பரப்பளவாக 185 சதுர கி.மீ பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் மத்திய தரைக் கடலோரத்தின் சிறிய பகுதியையும் மத்திய தரைக் கடலிலுள்ள எர்வத் எனப்படும் சிறிய தீவையும் கோலான் குன்றுகளையும் கொண்டுள்ளது. மேலும் ஜபலுஷ் ஷெய்க் என்ற நாட்டின் மிக உயரமான மலையையும் கொண்டுள்ளது . இதன் உத்தியோக பூர்வ மொழியாக அரபு இ ஆங்கிலம் இ பிரெஞ்சு மற்றும் குர்தி போன்ற மொழிகள் உள்ளன. இதன் தலை நகராக டமஸ்கஸ் ( னுயஅயளஉரள ) காணப்படுகிறது

2005 ஜூலை மாதத்தில் சனத்தொகை கணக்கீட்டின் படி 19.043.00  மக்கள் தொகையைக் கொண்டுள்ளது . அதன் மொத்த தேசிய உற்பத்தி கூ71.74 பி வும் அதன் தலா வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 5.348 ( 10 ) வீதம் கொண்டுள்ளது .

சிரியாவின் மக்கள் தொகையில் 74மூ  பெரும்பாண்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் களையும் இ 16 மூ ஷீஆ முஸ்லிம்களையும் இ 10 மூ கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது .

சிரியாவைப் பொறுத்தவரை இது மனித வரலாற்றில் மிகவும் பழமை வாய்ந்த ஒரு ஒரு பூமி.   கண்ணானியர்கள் இ  செம்மித்தியர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்து வந்த ஒரு நாடு. இஸ்லாமிய வரலாற்றில் ஷாம் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான பிரந்தியத்தின் ஒரு பகுதி ( பலஸ்தீன் இஜோர்தான் இலெபனான் இ சிரியா என்பன  ஷாம் பிரதேசத்தில் உள்ளடங்கும்  நாடுகள் ) இதன் சிறப்புகள் பற்றி ஏறாளமான ஹதீஸ்கள் நபிஸல் அவர்களால் முன்மொழியப் பட்டுள்ளது . 

இங்கு  கி.மு. 30 ஆம் ஆண்டில் செம்மித்தியர்களின் ஆட்சியின் கீழும் பின்னர் ஆர்மோனியர்கள் இ எகிப்தியர்கள்இ அசீரியர்கள்இ பபிலோனியர்கள் இ பாரசீகர்கள் என்று பல்வேறு பிரிவினர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர் . கி.மு. 64 இல் மஹா அலெக்ஸாந்தரின் கட்டுப்பாட்டில் சிரியா இருந்தது. சிரிய வரலாற்று  இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது கலீபா அபூபக்கர் ( றழி ) அவர்கள் சிரியாவைக் கைப்பற்றுவதனூடாக இஸ்லாம் பல நாடுகளுக்கு அறிமுகமாகும் என்ற நோக்கில் நாற்பெரும் இஸ்லாமியப் படையை ஹிஜ்ரி 12 இல் சிரியாவுக்கு அனுப்பப்பட்டது .

யர்மூக் நதிக்கரை அருகில் ஜவ்லான் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் ரோமர்களுக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. இஸ்லாமியப் படையின் தளபதியாக  காலித் பின் வலீத் ( றழி )  தலைமைவகித்தார். தொடர்க்கத்தில் சிரிவின் தென் பகுதி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தது. தொடர்ந்தும் டமஸ்கஸும் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு சிரியா முழுவதும் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ( றழி ) தலைமையில் கைப்பற்றப் பட்டது. சிரியாவின் பெரும்பாலான நகரங்களான ஹிம்ஸ்இ ஹுமா போன்ற நகரங்களும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. சிரியாவின் மாகாண அதிபராக முஆவியா ( றழி ) நீண்ட காலம் பதவி வகித்தார். இவருடைய ஆட்சியில் இருந்து உமையா வம்ச ஆட்சி தொடங்கியது சும்மார் 90 வருடங்களாக டமஸ்கஸ் தலைநகராக இருந்தது.

பின்னர் கி.பி. 878 இல் எகிப்திய ஆட்சியாளர் அஹ்மத் பின் துலூன் என்பவர் சிரியாவைக் கைப்பற்றினார். கி.பி. 969 முதல் 1027 வரை எகிப்திய பாதிமிக்களின் ஆட்சி தொடர்ந்தது. பின்னர் சல்ஜூக்கியர்கள் கைவசமானது. சிறிது காலம் கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் சிலுவை யுத்தத்தின்போது சிரியாவின் சில பகுதிகளை முஸ்லிம் படைகள் மீட்டது. இதற்கு நூருத்தீன் ஸன்கி தலைமை வகித்தார்.  பின்னர் ஸலாஹுத்தீன் ஐயூபி அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1193 இல் ஸலாஹுத்தீன் ஐயூபின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் கிறிஸ்தவர்கள் தன்வசமாக்க முயன்றார்கள் .

பின்னர் 1517 இல் துருக்கிய மன்னர் முதலாம் ஸலீம் சிரியாவை உஸ்மானிய சாம்ராஜியத்தோடு இணைத்தார். இவ்வாறு மூன்று நூற்றாண்டுகள் சிரியா உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் இருந்தது. முதலாம் உலகப் போரில் துருக்கி பலவீனப் படுத்தப் பட்டதால் அதன் கீழ் இருந்த பிராந்தியங்கள் காலனித்துவ சக்திகளால் துண்டாடப் பட்டன.  இதற்கமைவாக சிரியா பிரான்ஸின் காலனித்துவ நாடாக மாறியது. 1941 இல் பிரான்ஸிடமிருந்து சிரியா அரசியல் சுதந்திரம் பெற்றது. 1945 இல் தேர்தல் மூலம் அங்கு ஒர் தேசிய அரசாங்கம் நிறுவப் பட்டது . இதன் ஜனாதிபதியாக சுக்ரி குவைலித் தெரிவானார். 1958 இல் எகிப்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு நாடுகளும் தம்மை ஐக்கிய அரபுக் குடியரசு என அறிமுகம் செய்தன . 1961 இல் இராணுவ சபை உருவாக்கப்பட்டு பின்னர் எகிப்திலிருந்து சிரியா பிரிக்கப்பட்து . 

பின்னர் சிரியாவின் ஜனாதிபதியாக நாஸிம் அல் குத்ஸி ஜனாதிபதியகத் தெரிவு செய்யப்பட்டார். 1963 மார்ச் 8 இல் ஜனாதிபதி   நாஸிம் அல் குத்ஸியின் அரசாங்கம் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் திட்டமிட்டு  பதவி கவிழ்க்கப்பட்டது. அப்போதைய இராணுவத் தளபதியாக ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் என்பவரே பிரதான சூத்திரதாரியாக இருந்தார். பின்னர் ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் புரட்சி மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தார். இவர் சுமார்  2000 ஆண்டு வரையும் சிரியாவின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக இருந்தார். 2000 இல் அஸாதின் மரணத்தைத் தொடர்ந்து அவனது மகன் கொடுங் கோலன் பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு  வந்தான் .

இராணுவப் புரட்சி மூலம் பதவியைக் கைப்பற்றிய அஸாத் சோசலிஸ கொள்கையைக் கடைப்பிடித்தார். மேலும் அவரது பாத் கட்சியும் குடும்பமும் அதிக அதிகரத்தில் ஈடுபடும் வகையில் சிரியாவின் அரசியல் அமைப்பை மாற்றிக் கொண்டார். அன்றிலிருந்து இன்னு வரைக்கும் அந்தக் கொள்கை நீடிக்கின்றது. இதில் 60 மூமான பாராளுமன்ற ஆசனங்கள் அவருடைய பாத் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. 40மூமான ஆசனங்களுக்குத்தான் நாட்டில் தேர்தல் நடைபெறும் . அதில் ஊழல் நிறம்பியதாகவும் கானப்படும். அதேபோல் இவர் ஷீஆ முஸ்லிம்களில் பனு நூசைரி எனும் பிரிவைச் சேர்ந்தவர். (தொடரும்)

அலுவலக ஆசிரியர் ஹபீசுல் ஹக்
Previous Post Next Post