முஸ்லிம் என்கின்ற பெயருக்கு நம்பிக்கை உண்மை, தேசபக்தி என்ற அர்த்தங்களும் உண்டு, இன்று இலங்கையில் வியாபாரத்தில் உச்சத்தை அடைந்துள்ள இலங்கைவாழ் முஸ்லிம்கள் பணம் சம்பாதிப்பதற்காக ஹராமான காரியங்களிலும் ஈடுபடுவதை நாங்கள் கண்களால் கண்டுள்ளோம்
ஆனாலும் அவற்றை அவர்களிடம் சொல்லி திருத்த முயற்சிப்பதில்லை அது பணக்கார வர்க்கத்தினரின் செயல் நாங்கள் தலையிடல் ஆகாது என்று பின்வாங்கி செல்கிறோம். பாவத்தை நாவால், கையால் தடுக்க சொன்ன இஸ்லாம் மார்க்கம் பாவத்தை தடுத்து நன்மைகளை அதிகம் செய்ய சொல்லியது.
நமது அதாவது முஸ்லிம்களின் நன் நடத்தைகள் காரணமாக மற்றயவரை ஏனைய மதத்தவரை கவருதல் அவசியம் அதன் மூலமே இஸ்லாம் பரவும் அதை விடுத்து வேறு செயல்களால் இஸ்லாம் பரவாது. இது அண்ணல் நபி காட்டிய வழிமுறை. இலங்கையில் இஸ்லாத்தை இலகுவாக பரப்ப முடியும் காரணம் இது மூவின மதத்தவர்கள் வாழும் நாடு நாங்கள் எங்கள் நடவடிக்கை மூலம் அவர்களை கவருவதன் மூலம் எமது மார்க்கத்தை பரவச் செய்திடலாம் அதைவிடுத்து அனைத்து பாவத்தையும் மோசடிகளையும் ஏமாற்று வேலைகளையும் நாங்கள் செய்தால் எப்படி மார்க்கம் பரவும்? சிந்தியுங்கள். வர்த்தகத்தில் மேலோங்கியுள்ள நாம் அந்த வர்த்தகங்களில் ஹராமாக சம்பாதிக்கிறோம் அல்லது அதில் மோசடி செய்கிறோம் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்கள் அதனால் பாதிக்கப்படுகின்றனர்.
அப்படியான விடயம் ஒன்றுதான் கொந்தறாத்து Contract என்ற வர்த்தகம் அரச மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் கட்டுமாணப்பணிகளுக்காக கொந்தறாத்து காரர்களுக்கு வேலைகளை டென்டர்களை ஒப்படைக்கின்றனர். அதற்கென பெருந்தொகை பணம் ஒதுக்கப்படுகிறது உதாரணமாக ஒரு இலட்சம் என்றால் 50 ஆயிரம்ரூபாய்க்கான வேலையே செய்யப்படுகிறது மீதமிருக்கும் 50 ஆயிரமும் இலாபம். இது பாரிய மோசடியாகும். இதற்காக பொய்யான சான்றிதழ்கள், பொருட்களில் மோசடி, சொல்லாதவற்றை செய்தல் ஏமாற்று செயல் என மண்தின்னும் வேலையை கொந்தறாத்து காரர்கள் செய்து வருகிறார்கள். அண்மையில் முஸ்லிம் பகுதியில் வடிகான் கட்டுமாணத்தில் இடப்படியான ஒரு மோசடி நடந்தது. இன்னுமொரு கிராமத்தில் தார் இடுவதற்கு கொந்தறாத்து பெற்று அது இடப்படவும் இல்லை. இப்படி அதிகமாக முஸ்லிம் கொந்தறாத்து காரர்களின் கொடூரமனம் இன்று செயற்பாடுகளில் வெளிப்படுகிறது.
அநீதிகளை கணடால் தட்டிக்கேளுங்கள், அதனை தடுக்க முன்வாருங்கள் நமக்கென்ன வந்துவிடப்போகிறது என பின்வாங்காதீர்கள் அது உங்களையும் பாதிக்கும். நம் நாடு நம் தேசம் இதைக்கட்டியெழுப்ப முன்வாருங்கள் உண்மை மார்க்கம் உலகமெலாம் பரவச் செய்திட ஒன்றிணைவோம்.
பஹத் ஏ.மஜீத்.
பிரதம ஆசிரியர்