Top News

கார்ணிவெல் என்ற பெயரில் உங்கள் ஊரில் நடக்கும் சூது விளையாட்டு




திருக்குர்ஆனில் சூதாட்டத்தை அல்லாஹ் தடை செய்துள்ளான். சூதாட்டம் ஒரு தீயசெயல் என்பதை அதிகமான மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று நம்புகின்றனர். ஆனால் சூதாட்டம் என்றால் என்ன என்பது குறித்து சரியான விளக்கம் அவர்களிடம் இல்லை.
தாயக்கட்டை, சீட்டாட்டம் ஆகியவைதான் சூதாட்டம் என்ற அளவில்தான் சூதாட்டம் பற்றி மக்களின் அறிவு அமைந்துள்ளது. குறிப்பிட்ட விளையாட்டுகள்தான் சூது என்று கருதுவது அறியாமையாகும்.
சூது என்றால் என்ன? 
சிலர் கூட்டு சேர்ந்து தலைக்கு இவ்வளவு என்று பணத்தைப் போட்டு குறிப்பிட்ட விளையாட்டில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அனைவரின் பணத்தையும் எடுத்துக் கொள்வதுதான் சூதாட்டமாகும்.
இந்த அம்சம் எந்த விளையாட்டில் இருந்தாலும் அது சூதாட்டத்தில் சேரும். 
உதாரணமாக பத்துப்பேர் தலைக்கு நூறு ரூபாய் கட்டி ஓட்டப்பந்தயம் நடத்துகின்றனர். அதில் ஜெயிப்பவர் அனைவரது பணத்தையும் எடுத்துக் கொண்டால் அது சூதாட்டத்தில் சேரும். 
பணம் வைக்காமல் சீட்டாடினால் அது வீணான காரியம் என்பதற்காக கூடாது என்று கூறலாமே தவிர அது சூதாட்டமாகாது. ஏனெனில் இங்கே எந்தப் பணப் பரிவர்த்தனையும் இல்லை. 
மற்றவர்கள் ஆடும் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதற்காகப் பணம் கட்டினால் கூட அதுவும் சூதாட்டத்தில் சேரும்.
நுவரெலிய கார்ணிவெலில் இடம்பெற்ற சூதுக்காட்சி, அதிகமான முஸ்லிம்களை இதில் பங்குபற்றுவதை காணக்கூடியதாக இருந்தது. (படம் - சிறப்பு செய்தியாளர் ஹாலீக் )

கார்ணிவெல் என்ற பெயரில் நடக்கும் சூது.
உங்கள் ஊரில் கார்ணிவல் நடந்திருக்கும் இல்லை தற்பொழுது நடந்து கொண்டிருக்கலாம், அங்கு என்ன நடக்கிறது இது இஸ்லாத்திற்கு விரோதமானதா இல்லை எந்த வகையில் நடைபெறுகிறது என்பது பற்றி நாம் ஆராய்ந்தது உண்டா இல்ல, பாவங்களை நாவால் தடுங்கள், அல்லது கையினால் தடுங்கள் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள் இன்று குறிப்பிட்ட பாவங்களை நாமே செய்து கொண்டிருக்கிறோம்.

கார்ணிவெலில் 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் கட்டி ஒரு விளையாட்டு வளயம் வீசுவது வளையம் விழுகின்ற பகுதியில் இருக்கும் காசுப்பொதி பரிசு அல்லது பொருட்கள் பரிசு இது பாரிய சூது ஆகும் சூது என்பது விளையாட்டல்ல இது பாவமாகும். இவைகள் உங்கள் ஊரில் நடைபெற்றால் தடுத்து நிறுத்துங்கள் முஸ்லிம் பகுதிகளில் என்ன நடைபெறுகிறது என பாருங்கள் பாவங்களை தடுத்து நிறுத்துங்கள். 
Previous Post Next Post