ஹபீசுல் ஹக்
இதை நான் எழுதுகின்ற போது எனது கண்கூட கலங்கிவிட்டது... எனது உணர்வுகளும் பொங்கி மேல் எழுந்தது ... ஸுப்ஹானல்லாஹ் .
இன்று மியன்மாரில் அர்கான் பிரதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் அரசினாலும் இ இனவாதிகளாலும் நடத்தப்பட்டுவரும் இனவாதத் தாக்குதல்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
இது ஒரு பெண்ணின் நிஜமான கண்ணீர்
☞ நாங்கள் சாதாரண குடும்பத்தில் உள்ளவர்கள் . எனது கணவர் மத்ரசாவில் ஹதீஸ் பாடத்தில் விரிவுரை செய்கின்றவர். எனது கணவரரின் உழைப்பினூடாகவே நாங்கள் குடும்ப நடத்தி வந்தோம் . இப்போது எனது கணவர் இல்லை . எனது கணவரை இந்த இனவாத மிருகங்கள் அறுத்துக் கொண்டு விட்டார்கள் .
அதேபோல் எனது ஐந்து வயது அன்பு மகனான முஹம்மத் றபீக்கை இந்த கொடூர மிருகங்கள் என்னுடைய கண்ணுக்கு முன்னால் எரித்து விட்டார்கள் . அவனை அந்த கொடூர மிருகங்கள் எரிக்கும் போது அம்மா .... அம்மா....அம்மா... எரியிதுமா ...என்ட மேல் அலத்துதுமா என்று சத்தமிட்டு அழுதான் . என்னை அந்த கொடூர மிருகங்கள் மரத்தடியில் கட்டி வைத்துவிட்டார்கள். எனது மகனை நான் எனது கண்ணுக்குள் வைத்து வளர்த்து வந்தேன் . இப்போது எனது அன்பு மகனையும் இ எனது கணவரையும் இழந்து நடு காட்டில் ஒழித்து கொண்டு உணவு இல்லாமல் உடை இல்லாமல் வீடு இல்லாமல் உணர்வு இல்லாத ஜடம் போன்று இருக்கின்றேன் . தொழுவதற்கும் கூட பள்ளிகள் இல்லை இப்போது நாங்கள் வயல் நிலங்களிலும் மரத்தடியில்தான் தொழுது வருகின்றோம் .
2016 ஆண்டின் பின் மியன்மார் அரசும் இனவாதக் கும்பலும் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பில்
சுமார் ஐந்து கிராமங்களில் 2000 திற்கும் மேட்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது . 250 க்கும் மேற்பட்ட அப்பாவி பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் . மேலும் 50 கற்பினிப் பெண்களின் குழந்தைகளை கருவிலையே கொன்றுள்ளார்கள். சுமார் 1000 த்திற்கும் அதிகமானோர் எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் கொல்லப்பட்டுள்ளார்கள் .
இதுதான் அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்களின் சோகக் கண்ணீர் . இவர்களின் சோகத்தில் நாங்களும் கலந்து கொண்டு இறைவனிடம் பிரார்திப்போம் .