Top News

அட்டாளைச்சேனை இனியும் ஹக்கீமை நம்பாது என்பது உறுதி



அரசியல் ஒரு நாடக மேடை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அந்த மேடையில் பிரதான நடிகர்களாக தோன்றுபவர்களுக்கே கிராக்கி அதிகம், பின்னுள்ள ஏனைய கதாபாத்திரங்கள் மக்களிடத்தில் இடம்பிடிப்பதில்லை.

அரசியல் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான தீர்வு என்றாலும் இன்றைய சூழலில் அது கொஞ்சம் மாறுபட்டுபோய்விட்டது. அரசியல்வாதிகள் மக்களால் தெரிவு செய்யப்படல்வேண்டும் ஆனால் இன்று அரசியல்வாதிகளே தங்களை அரசியல்வாதிகள் என்று சொல்லிக் கொண்டு பணத்தை செலவழித்து அரசியலுக்குள் வருகின்றனர். எந்தக் கட்சிக்கு மக்களிடத்தில் கிராக்கி இருக்கிறதோ அந்தக்கட்சியில் வாக்குக் கேட்டு வெற்றி பெற்று பணம் சம்பாதிப்பதை இன்று ஒரு கூட்டம் செய்து கொண்டிருக்கிறது. இவைகள் ஒரு புறமிருக்க இலங்கையில் முஸ்லிம்களுக்கான கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன் ஆரம்பம் நல்லதாக இருந்தாலும் பிற்பட்ட காலப்பகுதியில் அதுவும் உழைக்கும் கட்சியாக மாறிவிட்டது.

மர்ஹூம் அஸ்ரபின் மறைவுக்கு பிறகு கட்சியின் தலைமை பொறுப்பினை எனக்கு விருப்பமாக உள்ளது என்று கேட்டு பெற்றுக்கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கிழக்கு மக்களின் அபிலாசைகளை வைத்து அரசியல் செய்தார் இன்றும் செய்கிறார். கிழக்கில் முற்றுமுழுதாக ஒரு ஊர் ஓர் கட்சிக்கு ஆதரவு என்றால் அது அட்டாளைச்சேனைதான் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இன்று வரை முஸ்லிம் காங்கிரசுக்கே அட்டாளைச்சேனை மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்த மக்களுக்கு அதை தருவேன் இது தருவேன் என்று பூச்சாண்டி காண்டிக்கொருக்கும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கடந்த பொதுத்தேர்தலின் போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராறுமன்ற உறுப்புருமை வழங்குவேன் என வாக்குறுதியளித்திருந்தார் இன்றுவரை அது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏமாற்றத்தை இதுவரை பொறுத்திருந்த மக்கள் எதிர்காலத்திலும் இவரின் ஏமாற்றுக் கதைகளுக்கு நம்பாமல் மாற்றுவழி அரசியலை செய்யலாம் என எண்ணியுள்ளனர் அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் அமைச்சர் ஹக்கீமின் கதைகளையும் புரட்டுக்களையும் நம்பாமல் தனிப்படையாக சி்ந்தித்து செயல்பட எண்ணியுள்ளனர். எப்படி பார்த்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் மு.காவுக்கு வாக்குச்சரிவு 50 தொடக்கம் 60 வீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எவ்வளவு நாளைக்குத்தான் ஒரு ஊரை ஏமாற்றுவது அதற்கும் ஒரு எல்லையுண்டு அல்லவா.
Previous Post Next Post