Top News

யார் சர்வாதிகாரி? டிரம்பிற்கு சரியான விளக்கம்



ஊடகவியலாளர் ஜெம்ஸித் அஸீஸ் அவர்களின் முகப்புத்தக பதிவு

கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்த மறுநாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவேற்றுகிறார்.
வேறொன்றுமில்லை. அது ஃபிடல் காஸ்ரோ பற்றியதுதான்.
அவரது வழமையான ஸ்டைலில்தான் பதிவு இருக்கிறது.
"கியூபாவை ஆட்சி செய்த ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி. அவரது ஆட்சிக் காலத்தில் கியூபாவில் கொள்ளை, வறுமை, மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. இனி கியூப மக்கள் சுதந்திரமாக வாழலாம்" என்பதுதான் அவரது பதிவின் சாராம்சம்.
ட்ரம்பின் இந்தப் பதிவுக்கு உலக்கெங்குமிருந்தும் ஆயிரக்கணக்கானோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து கூப்பிடு தூரம்தான் கியூபா. உலகின் சர்க்கரைக் கிண்ணம் அது.
கியூபாவில் 170 வீடுகளுக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக அண்மையில் வாசித்தேன்.
வயது வந்த கியூபர்கள் அனைவரும் படித்தவர்கள் என்கிறது யுனிசெப்.
எச்.ஐ.வி-இனால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவாமல் தடுத்த உலக சாதனையையும் கியூபா நிலைநாட்டியிருக்கிறது.
கியூபாவை விட அமெரிக்கா 20 மடங்கு அதிகமாக ஒரு தனி நபருக்கு மருத்துவச் செலவு செய்கிறது. ஆனால், கியூபாவில் பிரசவ கால மரணங்கள் அமெரிக்கா வைவிடக் குறைவு என்கிறது உலக வங்கி.
அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக விட்டாலும் கியூபா வளர்ச்சி கண்டிருக்கிறது. அத்தனை சவால்களையும் மீறி வளர்கிறது. பொருளாதாரத் தடைகளையும் தாண்டி பயணிக்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகன் அன்று ஃபிடல் காஸ்ரோவை சர்வாதிகாரி என விமர்சித்தபோது,
"அணு ஆயுதப் போருக்கு உத்தரவிடக்கூடிய கொடூரமான அதிகாரங்களைப் படைத்த அமெரிக்க அதிபரா, அல்லது நானா யார் பெரிய சர்வாதிகாரி?" என்று ஃபிடல் நறுக்கென பதில் கொடுத்தது நினைவுக்கு வருகிறது.
Previous Post Next Post