Headlines
Loading...
முஹம்மத் நபிகளார் & இயேசு நாதர் பிறப்பு: வீதிகளில் மட்டுமா ஒளி?

முஹம்மத் நபிகளார் & இயேசு நாதர் பிறப்பு: வீதிகளில் மட்டுமா ஒளி?




★ஜெம்ஸித் அஸீஸ்★

முஹம்மத் நபிகளார் பிறந்த நாளில், மாதத்தில் 

வீதிகளில் ஒளிர்கின்றன கலர் பல்புகள்…

முஸ்லிம்களும் (எல்லோருமல்ல) அதனைக் கொண்டாடுகின்றனர். (அது பற்றிய நிலைப்பாட்டை விளக்குவதல்ல இந்தப் பதிவு)

இயேசு பிறந்த நாளுக்கான விழா டிசம்பர் 25 இல்.

அதுதான் கிறிஸ்மஸ் பண்டிகை அங்கும் கலர் கலராய் வெளிச்சங்கள்…

அதனைக் கொண்டாட கிறிஸ்தவர்கள் தயாராகி வருகிறார்கள்.

வீதிக்கு வெளிச்சம் கிடைக்கும்…
மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் வெளிச்சம் பரவும்...
பரஸ்பரம் வாழ்த்துக்கள் வாய்களில் உதிர்க்கும்…

ஆனால், நித்திய மகிழ்ச்சி கிடைக்குமா?
இல்லை. ஒருபோதும் இல்லை… 
உள்ளங்களில் வெளிச்சம் பாய்கின்றபோதுதான் அது கிடைக்கும். 

சத்தியத் தீயினால் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளி ஒரு பக்கம்…

மனித நேயத்தினால் ஊடுருவிப் பாயும் ஒளி மறு பக்கம்… என

மனத் தோப்புகளில் ஒளிர வேண்டும் பல்புகள்!

அப்போதுதான் முழு நாடும் 
பூரண சந்திரன் போல் காட்சி தரும்!

சின்னச் சின்ன மெழுகுவர்த்திகளையாவது 
கொழுத்தி வைப்போம் நம் உள்ளங்களில்!