Top News

கீழ்த்தரமான அரசியல் செய்யும் பேஸ்புக் போராளிகள்



பொதுவாக சமூக வலைத்தளங்கள் கருத்தாடலுக்கான சமவெளியாக காணப்படுகிற போதிலும் அதிலும் இன்று அரசியல் சினிமா என்று வீண்வம்புகள் பேசப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது ஆரோக்யமான ஒன்றல்ல.

அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியலில் அதுவும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளும் அவர்களின் போராளிகளும் பதிவேற்றும் அளப்பறைகளை பார்கின்ற பொழுது மிகவும் மனவேதனை அளிக்கிறது. காரணம் குறைகளையும் மறைக்கப்படவேண்டிய விடயங்களையும் சமூக வலையில் பதிவேற்றுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

இன்றைய அரசியல் முஸ்லிம் சமூகம் சார்ந்ததாக சிந்திக்கும் உரையாற்றும் செயற்பாடு செய்யும் எந்தவொரு அரசியல் பிரமுகரும் இன்று சமூகத்தில் இல்லை, இன்று அரசியல் ஒருவியாபாரமாக போய்விட்டது பிரச்சார காலங்களில் போட்ட முதல்களை வெற்றிபெற்ற பி்ன்னர் இலாபத்துடன் சேர்த்து பெற அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் அதுதான் நடைபெறுகிறது. சுகபோக வாழ்க்கை, இன்னோரன்ன சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்னர் மக்கள் மயிருக்கும் அருகதையில்லாமல் போய்விடுகின்றனர். இந்த சொற்ப இலாப அரசியல்வாதிகளுக்கு பின்னால் கூஜாதுாக்கி எமது பாவங்களை அதிகரித்து விடுவதும் அழகல்ல.

இன்று முஸ்லிம் சமூதாயம் பாரிய சேவை செய்ய வேண்டிய தேவையிருக்கிறது, எமது வரலாற்று ஆவணங்கள், கலாச்சார ஆவணங்கள், முன்னோர்கள் பற்றி வரலாற்று அறிவு, நமது மார்க்கத்தை பரப்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை இப்படி அடுக்கடுக்கான பலவிடயங்களை செய்ய வேண்டிய கடப்பாடில் இருக்கிறோம் இதைவிடுத்து வேண்டா வேலைகளை செய்வதும் மற்றவர்கூறித்திரிவதும் அழகல்ல.


Previous Post Next Post