ஆசிரியர் பீட ஆசிரியர் சாக்கீ்ர்
உலகமனிதவரலாற்றின் ஆரம்பம், மானிடப்பல்வகைமைகளின் தொடக்கப்புள்ளி, பல்வேறு நம்பிக்கைகள் சங்கமிக்கின்ற ஒரு அமைதியான உச்சம். அதுபூலோகத்தின் சுவர்க்கபுரியில் இருக்கின்றது.
இலங்காபுரி, சரண்டிப், சஹிலான், சிலோன்,சைலான், ஜஸிரதுல் யாகூத் (மரகதத்தீவு), இந்துமகாசமுத்திரத்தின் முத்து, என வருணிக்ப்படுகின்ற, நதிநரம்புகள் படந்து, காட்டின் கனத்தபச்சைப் போர்வைகளை இறுகப்போற்றிக்கொண்டு, சுவனத்துப்பட்சிகளும்,மனங்களிக்கும் மலர்களும், கடல்படுதிரவியம், காடுபடுதிரவியம் எனஅனைத்துவளங்களும் ஒருங்கேசேர்ந்த அழகியதீவினுள்ளே, பாவாதமலையில் மறைந்திருக்கின்றது உலகமானிட இரகசியம்.
இலங்கையின் சப்பரகமுவமாகாணத்தில் இரத்தினபுரியிலிருந்து வடகிழக்கே பதினாறு கிலோமீற்றர் தூரத்தில் பாவாதமலை அமைந்திருக்கின்றது, பள்ளத்தாக்கிலிருந்துவானைநோக்கிஏறிச்செல்கின்ற இதன் உச்சம், கடல் மட்டத்திலிருந்து 2243 மீற்றராககாணப்படுகின்றது.
இவ் உச்சத்தைஅடையசிரமமானசெங்குத்தைஅண்மித்தமாதிரி கூம்புவடிவில் இருக்கின்ற இதன் சிகரத்தைஅடைவதுமிகவும் துணிகரமானசெயல்தான். என்றாலும் ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னரிருந்தேஇலங்கையின் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்வந்துகொண்டிருக்கிண்றயாத்திரீகர்களுக்குதூரதேசகடற்பயணமோ,அதன்பின்னர் காட்டுவழிப்பாதைகளில் ஏற்படுகின்ற இடர்களோசலிப்பை எற்படுத்தவில்லை.
அந்தஉச்சத்தைஅடைகின்றசுவாரஸ்யமேமிகைத்திருந்தது.
ஆதமின் சிகரத்திற்கு, அல்-ராஹுன், செலுசுமானோ, சமஸ்தகூடம், சமநிலம், சமனலகந்த, சிறீ-பாத,சிவனொளிபாதம் எனபலபெயர்கள் வழங்கப்படுகின்றன. இலங்கையை கைப்பற்றியபோர்த்துக்கீசர்கள் இந்த மலையைமலையை ''பைகோடி ஆடம்'' எனஅழைத்தனர், ஆங்கிலத்தில் இது அடம்ஸ் பீக் எனவும் அழைக்கப்படுகின்றது.
பாவாதமலைஅதன் உச்சியில் எழுபத்துநான்குஅடிநீளமும் இருபத்துநான்குஅடிஅகலமும் உடையதளத்;தைக் கொண்டுள்ளது. இந்தச் சமவெளியில் பதிந்திருக்கின்றஅசாதாரணமாகபருத்தஅளவில் இருக்கும்காலடிச்சுவட்டின் மர்மமும் அதன்பின்னணியில் உலகின் பல்வேறுமக்களிடையேநிலவிவந்தநம்பிக்கைகளும்,மரபுவழிக் கதைகளுமே இந்தசிகரத்தின் உலகளாவியபுகழுக்குக்காரணம்.
இத்தளத்தில் அறுபத்தெட்டுஅங்குலநீளம்,முப்பத்தொன்றுமற்றும் இருப்பத்தொன்பது அங்குலஅகலமும் (பெருவிரற்பக்கம் மற்றும் குதிப்பக்கம்)உடையமனிதகாலடிச்சுவட்டைஒத்ததழும்புகாணப்படுகின்றது.
இந்தப் பாதஅடையாளமானது இந்தியமத நம்பிக்கைகளின் படிசிவனுடைய பாதச்சுவடாகவும்,பௌத்தர்களிடையே கௌதம புத்தரினுடையபாத அடையாளம் என்றும்,சிலகிறிஸ்துவ வகுப்பாரிடையே புனிததோமஸ் அடிகளாரினுடையது என்றும் எதியோப்பிய மகாராணியினுடையது என்றும் மற்றும் வேறு பலருடைய பாதஅடையாளம் என்றும் பலகருத்துவேறுபாடுகள் நிலவுகின்றது.
உலகின் மனிதசமுதாயத்தினர் அனைவரும் ஒருமனித சோடியிலிருந்தே படைக்கப்பட்டனர் அவர்கள் இருவரும் ஆதம் மற்றும் ஹவ்வா என்று அறியப்படுகின்றனர். அந்தஉலகின் முதல் மனிதரான இறைவனின் தூதருடையபாத அடையாளம்தான் இலங்கையிலுள்ளமலைச்சிகரமொன்றில் பதிந்துள்ளது என்கின்ற நம்பிக்கை செமித்திய மதபிரிவினர்களான யூத, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியர்களிடையேநிலவிவருகின்றது.
அதேவேளைசுவனத்தில் வசித்த இவர்கள் இருவரும் இறைவன் உண்ணக்கூடாதுஎன்றுதடுத்தமரத்தின் கனியைஉண்டதனால் இறைவனின் கோபத்திற்குள்ளாகிசுவனத்தை இழந்தனர்; என்றும்,இறைவன் ஆதம்அலைஹிஸலாம் அவர்களைசெரந்தீபிலும் ஹவ்வாஅலைஹிஸலாம் அவர்களை ஜித்தாவிலும் இறக்கியதாக இஸ்லாமியஅறிஞர்கள்பலரும் கருதுகின்றனர்.
'தஜ்னா'என்றபெயர் பெற்ற இந்தியாவில்தான் ஆதம் அலை இறங்கினார்கள் என்றுஅப்பாஸ் (றழி) கூறியதாக ஜலாலுத்தீன் சுயூத்தி குறிப்பிடுகிறார்.1
ஆனால்புகாரி ஹதீஸ் கிரந்தத்தின்விரிவுரையாளர் அய்னி ரஹ்மதுல்லாஹ்அவர்களும், இப்னு ஸஅது இப்னு அஸாக்கீர் அவர்களும்ஆதம் நபியவர்கள் பூமிக்குஇறக்கப்பட்டஇடம் இந்தியாவே என்கின்றனர்.
என்றாலும் ஆதம் இறங்கிய இடம் சரன்தீப் என்றே இஸ்லாமியஅறிஞர்களில் பலர் கருதுகின்றனர்.சரன்தீப் என்பதுஇலங்கையைக் குறிக்கஅரேபியர் பயன்படுத்தியபெயராகும்.ஆதம்நபிபூமிக்கு இறங்கியபோதுஅது இந்தியஉபகண்டத்தோடுஇணைந்திருந்துபின்னர்; பிரிந்தாக இமாம்களானபைஹக்கி,இமாம் தபரீ, இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹ் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அலி, இப்னுஅப்பாஸ்,கதாதா,அபுல் ஆலியாஆகியோர் அறிவிப்பதாகபின்வருமாறுஒருகுறிப்பும் உள்ளது.அதாவது
'ஆதம் இந்தியாவில் உள்ளஒருமலையில இறக்கப்பட்டார் அதுசெரந்தீபிலுள்ள நூத் எனப்படுகின்றது'என்பதுமேலும்சில இமாம்களின் கருத்துப்படிஇலங்கையில் ஆதம் நபியவர்கள் இறக்கப்பட்டதாக கூறப்படுவதைபொய்ப்பிக்க கூடியதாகஅல்லதுஆதம் நபி இறக்கப்பட்டதாக கூறப்படகூடியதாகஉலகில் வேறுஎந்த இடம் பற்றியகுறிப்புக்களோ ஆதாரங்களோகிடைக்கவில்லை என்கின்றனர்.
வரலாற்றாசிரியர் தபரி(கி.பி. 832) அவர்கள்,வௌ;வேறு இடங்களில் இறக்கப்பட்டஆதம் நபிமற்றும் அவரின் மனைவி ஹவ்வாஆகிய இருவரும் அரஃபாவில் சந்தித்தாகவும். ஆதம் தன் மனைவியை செரந்தீபிற்கு அழைத்துவந்து வாழ்ந்துவந்திருக்ககூடும். என்றுஉய்த்துணரவாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றார்
இப்னு குர்தாத்பே என்ற பாரசீகப் பயணி' செரன்டிபில்சொர்கத்திலிருந்து அனுப்பப்பட்டஆதமின் முதல் காற்சுவடுபதிந்தமலை இருக்கிறதுஎன்றும் அந்தமலையில் கற்றாளை, மிளகு,பலவகைநறுமணப்பொருட்கள் கிடைக்கின்றன,மற்றும் இம்மலைக்குஅருகில் மாணிக்கக் கற்களும் பிற இரத்தினங்களும் கிடைக்கின்றனஅத்தோடுமலையுச்சியில் ஆதாம் ஒரேயொருகாலடிவைத்தார் அதேவேளைஇந்தமலையிலிருந்துமின்னல் போன்றுதீக்கொழுந்து இடைவிடாதுமேலெழுவதாக இந்தியர்கள்; சொல்வதாகவும் அவரது நூலில் (கி.பி 844-848) குறிப்பிட்டுள்ளார். (இத்ரீஸ் ஏ.பி.எம் 2011)
ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியபகுதியில் இலங்கையைதரிசித்தசுலைமான் இப்னுதாஜிர்ஆதமலையை அல்-ராஹுன் என்கிறார். சிலஅறிஞர்களதுகருத்துப்படிஆதமலைஉள்ளபகுதியான றுஹுணு ரட்டையைகுறிப்பதற்காக இவ்வார்த்தைபயன்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கி.பி. 1293களில் இலங்கையைத்தரிசித்தமார்கப்போலோமற்றும் அவரிற்குஐம்பதுவருடங்களிற்குபின்னர் 1344ல் ஆபிரிக்காவின் மொரோக்கோதேசத்தின் தன்ஜீர் எனுமிடத்திலிருந்துஇலங்கையைத் தரிசித்தநாடுகாண் பயணி இப்னுபதூதாபோன்றவர்களின் குறிப்புகளிலும் ஆதமலைபற்றியகுறிப்புகள் இருக்கின்றன.
இப்னுபதூதா இதுபற்றிவிபரிக்கையில் கி.பி.942 அளவில் இந்தியாவிலிருந்து இங்கவந்துஆதமலையைத் தரிசித்து இங்குகாலமான அபூ அப்துல்லாஹ் என்பவருடையசமாதியைதரிசித்ததாகவும், அபூ அப்துல்லாஹ்வின் பிரயாணம் பற்றியசுவாரஸ்யமானமரபுக்கதையொன்றையும் குறிப்பிடுகின்றார்மேலும் அவர் ஆதமலைக்கானபுதியதொருவழியைக் கண்டுபிடித்தவராகவும் கூறப்படுகின்றார்.
இலங்கையிலுள்ளஆதம் தோட்டத்தில் ஒருவினோதமானவாழைவளர்வதாகவும் அதுமரத்தின் இயல்புகளைக் காட்டினாலும் தோட்டச் செடியின் இயல்புகளையேமிகுதியாகபெற்றிருப்பதாகவும் அந்தமரத்தின் இலைகள் அழகாகவும்,நீளமாகவும்,அகலமாகவும் இருப்பதாகவும் உள்ளுர் வாசிகள் அதைஅத்திஎன்றுசொல்கிறார்கள் என்றும் கூறும் மாரின்;ஜொலிஜான் (கி.பி 1347) அந்தமரத்தின் இலையைத்தான் ஆதாமும் ஏவாளும் தங்கள் இடையில் கட்டிக்கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்.
அதேநேரம் தப்ஸீர் ரூஹுல் பயான் என்கின்றகுர்ஆன் விரிவுரையிலே இமாம் இஸ்மாயில் அல் ஹக்கீ புருஸவிஅவர்கள் 'நபிஆதம் (அலை) அவர்கள் ஹிந்துபகுதியில் சரன்தீபில் இறங்கினார்கள் இதனால்தான் அப்பகுதியில் உள்ளமரங்களின் மீது வாசைன வீசுகின்றது'எனகுறிப்பிடுகின்றார்.
வெளிநாட்டுவரலாற்றாசிரியர்கள் அனைவரும் இம்மலையைஆதாமின் சிகரம் (யுனயஅ'ள Pநயம)என்றேகுறிப்பிடுகின்றனர். அங்கே இருப்பதுஆதித் தந்தையின் பாதம் என்றுநம்பியதாலேயேபழங்காலத்திலிருந்தேயூதர்கள்,கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எனஅனைவரும் அதைத் தரிசிப்பதற்காகவந்தனர் அதைஅவர்கள் புனிதபயணமாகவும் கருதினர்.
இச்சிகரத்திற்கானஏகபோகஉரிமையைசொந்தம் கொண்டாடுவதில் இலங்கையில் பல இனங்களிடையேபோட்டிநிலவிவருகின்றது. இது இச்சிகரத்தின் பரந்துபட்டஉலகத்தொடர்பையும்,மனிதப்பல்வகைமையின் துவக்கத்தையும் குறுகியமண்டலத்திற்குள் அடக்கிவிடும் செயற்பாடாகஅமைந்துவிடக்கூடும். இவ்வாறுஏகபோகஉரிமைக்காகதிரிக்கப்படும் வரலாற்றுவிகாரங்கள் ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளுக்குகளமமைக்கக்கூடும். பரஸ்பரபுரிதல்களும்,சகிப்புத்தன்மையும் வளக்கப்பட வேண்டியமுயற்சிகளில் நம்பிக்கைகளின் பொது மூலங்களிலொன்றாக இந்தஅமைதியின் சிகரம் திகழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.
ஒருபெருவிருட்சத்தின் கனிகள் அதனடியில் முளைத்துச்செடிகளாகிசிலகாலத்தின் பின்னர் ஒவ்வொருசெடியும் அம்முதிர்ந்தவிருட்சத்தைதனக்குமட்டும் உடமையாக்க நினைப்பதுசிறுபிள்ளைத்தனமாகும். ஆதமின் சிகரம் முழு உலகின் பாராம்பர்யசொத்தாகும்.
'மனிதர்களே! நிச்சயமாகநாம் உங்களைஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தேபடைத்தோம்; நீங்கள் ஒருவரைஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர்,உங்களைக் கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில்,நிச்சயமாகமிக்ககண்ணியமானவர். நிச்சயமாகஅல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.' (அல்-குர்ஆன் 49:13)