ஹலால் சான்றிதழ் விநியோகம் தற்பொழுது தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயம் இந்த நாசகார செயல் கடந்த அரசாங்கத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ அரசில் பொதுபலசேனா அமைப்பால் வேண்டுமென்று ஜம்மியதுல் உலமாவிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டது.
அப்போதய அரசாங்கமும் உடந்தையாக இருந்ததும் எம் அனைவருக்கும் தெரியும். இதனை பிடுங்கி தனியார் மயப்படுத்த பொதுபலசேனா அமைப்பு பாரிய ஹலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தது.
இப்பொழுது நல்லாட்சி இடம்பெறுகிறது, கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டது போல இன்று இல்லை, எங்களுடைய கேள்வி என்னவெனில் ஏன் மீள ஜம்மியதுல் உலமா சபையிடம் ஹலால் சான்றிதழ் விநியோகம் இன்னும் செல்லவில்லை? யார் இதன் பின்னணியில் இன்னும் இருக்கின்றனர். நல்லாட்சி என்பது பெயரளவில் மட்டும்தானா? உடைக்கப்பட்ட பள்ளிாசல்களுக்கு தீர்வு கிடைத்துவிட்டதா? மூடப்பட்ட பள்ளிவாசல்கள் மீள திறக்கப்பட்டுவிட்டதா? (அதாவது கிரேண்பாஸ் தெஹிவளை ) காணிகள் பிடுங்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா? இப்படி அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளுக்கு இன்னும் நல்லாட்சி விடை தரவில்லை என்றாலும் அந்த விடையினை நாமே அதாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அமைப்புக்கள் இழந்தவற்றை பெற முயற்சி எடுக்க வேண்டும் அப்படியான ஒன்றுதான் இந்த ஹலால் சான்றிதழ் விநியோகமும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹத் ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர்