இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் என்றும் இன்றும் இவ்வமைப்பின் மீது பல அவதூறுகளை அள்ளித் தெளித்த வண்ணம் இருக்கின்றனர். அவர்கள் எம் மீது கரிசனை கொண்டு விமர்சிக்கவில்லை. எமது முயற்சிகளையும் முன்னேற்றத்தையும் தடுக்கும் நோக்கிலேயே விமர்சிக்கின்றார்கள். எம்மீது அவர்கள் கரிசனை உள்ளவர்களாக இருந்தால் உண்மையை அறிவதற்காக எங்களைத் தொடர்பு கொண்டிருப்பார்கள் கேள்விகள் கேட்டிருப்பார்கள். எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டங்களை மிம்பர்களில் முழங்கும் துணிவு அவர்களுக்கு வந்திருக்காது.
எனவேஇ இந்தப் பதில் அவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அவர்களது பொய்இ புரட்டுக்களால் ஏமாந்த நல்லவர்கள் உண்மைகளை அறிந்து கொள்வதற்காக எழுதப்படுகிறது.
ஜமாஅத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் அதற்கெதிராகப் பரப்பிவரும் அவதூறுகளுள் ஒன்று 'இலங்கையில் ஷீஆயிஸத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது ஜமாஅத்தே இஸ்லாமிதான்' என்பதாகும்.
அவர்களை அல்லாஹ்விடம் சாட்டுகிறோம். அவர்கள் ஜமாஅத்தின் மஜ்லிஸுஸ் ஷூராவில் அமர்ந்து தீர்மானம் மேற்கொண்டவர்கள் போல பேசுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை நபிமொழிகளைத் தவிர ஏனைய அனைத்து செய்திகளையும் ஆதாரமின்றிப் பேச முடியும். தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றியென்றால் வாயில் வந்ததை எல்லாம் பேச முடியும். இனிஇ விடயத்திற்கு வருவோம்.
ஈரானியப் புரட்சிவரை அடங்கியிருந்த ஷீஆக்கள்இ புரட்சியோடு உலகையே மாற்றப் போவதாகக் கோஷமெழுப்பினர். அந்தக் கோஷங்கள் புரட்சியின் உள்நோக்கங்களை மறைத்து ஈரான் பற்றிய வேறு ஒரு படத்தை முஸ்லிம் உலகுக்குக் காட்டின. அந்தக் கோஷங்களில் சில வருமாறு:
1. இஸ்லாமியப் புரட்சி வெடித்து விட்டது.
2. உம்மத்தில் ஒற்றுமை மலரப் போகிறது.
3. மேற்கின் ஆதிக்கத்தை முறியடிப்போம்....
இவை போன்ற இன்னும் பல.
இந்தப் போலிக் கோஷங்களால் தனது முகத்தைத் திரையிட்டு மறைத்துக் கொண்டு ஷீஆயிஸம் குமைனியின் தலைமையில் ஆட்சி அடமேறியது.
இந்தப் போலிக் கோஷங்களால் ஏமாந்து ஈரானியப் புரட்சியை ஆதரித்த நல்லுள்ளங்கள் உலகில் ஆயிரமாயிரம். என்று ஜமாத்தின் உறுப்பினர்களாக இருந்த குறிப்பிடத்தக்க மூன்று நபர்கள் இவ்வாறு ஏமாந்தவர்களுள் அடங்குவர். அவர்கள் மூவரும் மரணித்து விட்டதனால் அவர்களால் ஜமாத்அதுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி நான் எழுதவில்லை. அவர்கள் தமது அந்திம காலத்தில் தமது போக்குகள் குறித்து கவலையடைந்திருநதார்கள் என்பதை நாம் அறிந்தோம். எனினும்இ அவர்களை ஜமாத் தனது உறுப்பினர்களாக மீண்டும் இணைத்துக் கொள்ளவில்லை.
குறிப்பிட்ட அந்த மூவரும் ஈரான் தொடர்பில் ஜமாத்தோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஜமாத்திலிருந்து விரைவிலேயே விலகிச் செல்ல வேண்டியேற்பட்டது. அந்த மூவரும் ஈரானுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் செய்த பிரசாரங்களையே ஜமாஅத் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இன்று அவரை ஜமாஅத் செய்த பிரசாரமாக சித்திரித்துக் காட்ட முயற்சிக்கிறார்கள்.
விலகிச் சென்ற மூவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி எனப் பரப்புரை செய்வது எவ்வளவு பத்தமானது! அந்த மூவரின் செயல்களை வைத்து ஜமாஅத்தே இஸ்லாமி மீது பழி சுமத்துவது நீதியும் அவதூறுமாகும். மேலும் பாண்டமும் அடாவடித்தனமுமாகும்.
இது ஈமானியப் புரட்சியைத் தொடர்ந்து ஜமாஅத்தில் இடம்பெற்ற நிகழ்வு. இந்த நிகழ்வின் பின்னணியே ஷீஆயிஸத்தை அடிப்படையாகக் கொண்ட ஈரானுக்கு ஜமாஅத்தினால் ஆதரவு தெரிவிக்க முடியாது என்பது தான். ஷீஆயிஸம் ஒரு புதிய வழிகேடு அல்லது நபித்தோழர்கள் காலத்திலிருந்து தோற்றம் பெற்ற வழிகேடு என்பதனால் ஈரானியப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று நம்ப ஜமாஅத் தயாராக இருக்க வில்லை.
அந்த வகையில் 1983ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற ஈரான் சார்பு சர்வதேச மாநாட்டில் இலங்கையில் ஷீஆக் கோட்பாடுகளைக் கற்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து ஜமாஅத்தே இஸ்லாமி பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஆதரவுக் குழுக்களால் ஜமாத்துக்கும் தன் அப்போதைய அமீர் மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் அவர்களுக்கும் எதிராக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் சொல்லடிகளும் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும். ஜமாஅத் அதனை தனித்து நின்றே எதிர்கொண்டது.
இது பற்றி மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்இ பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
'...ஷீஆக்களைப் பற்றி ஜமாஅத்தே இஸ்லாமி எடுத்த முடிவு இவர்களின் சொந்த நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததாலும்இ ஷீஆக்கள் ஸுன்னத்வல் ஜமாஅத்துக்கு மாற்றமானவர்கள் என்று தீர்ப்பு வழங்கிய உலமா ஆலோசனை சபையில் நான் சம்பந்தப்பட்டதாலும் இவர்கள் என்மீது ஆத்திரமடைந்தார்கள். இதன் காரணமாகவே எனது தலைமையில் இயங்கும் ஜமாஅத்தே இஸ்லாமியின் மீதும் என்மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார்கள்...' (அல்ஹஸனாத் மார்ச் 1983)
அது மட்டுமல்ல. ஈரானியப் புரட்சிக்குள் மறைந்திருக்கின்ற ஷீஆ முகம் பற்றி ஜமாத் எச்சரிக்கையுடனேயே இருந்தது. ஷீஆயிஸம் குறித்து ஜமாத்தனது ஊழியர்களுக்கு அவ்வேளை விரிவான விளக்கங்களையும் வழங்கியிருந்தது. பின்னர் இலங்கையில் ஷீஆயிஸம் ஊடுருவும் நிலை தோற்றம் பெற ஆரம்பித்தவேளை பொது மக்களை எச்சரிக்கும் வகையில் ஜமாஅத் பல்வேறு விளக்கங்களை அல்ஹஸனாத் ஊடாகவும் வேறு நிகழ்ச்சிகடாகவும் வழங்கியது. 1996 நவம்பர்இ டிசம்பர் அல்ஹஸனாத் இதழ்களில் 'ஈரான் தூதரகம் சிந்திக்குமா? என்று தலைப்பிட்டு இலங்கையில் ஷீஆயிஸத்தின் ஊடுருவல் குறித்து விரிவாக எச்சரிக்கும் வகையில் அல்ஹஸனாத் பிரசுரித்திருந்த ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே உதாரணத்திற்குத் தருகிறோம்.
சுமார் 19 வருடங்களுக்கு முன்னால் அந்தக் கட்டுரையில் ஷீஆ எதிர்ப்புப் பிரசாரத்தின் தேவை குறித்து இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது:
'ஈரானில் ஓதிவிட்டு வந்த சில மாணவர்கள் நமது கண்ணியமிக்க ஸஹாபாக்களை வமதித்துப் பல இடங்களில் கருத்துக்கள் வெளியிட்டமையும்இ ஈரானில் ஓதிய சில ஆசிரியர்களைக் கொண்டு ஈரான் தூதரகத்தின் உதவியோடு கிழக்கில் நடத்தப்பட்டு வரும் ஒரு அபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை ஈரானிலிருந்து ஷீஆ அறிஞர்களை வரவழைத்துக் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டமையும் அவர்களின் எழுச்சியைக் காட்டுகின்றன. அது மாத்திரமல்ல ஷீஆ அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுமிருக்கின்றன.....'
ஷீஆக்களின் கொள்கை பற்றி அந்தக் கட்டுரை தொட்டுக்காட்டிய சில முக்கிய குறிப்புக்கள்:
'....ஷீஆயிஸம் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் பலவற்றிலிருந்து நீண்ட தூரம் விலகிச் சென்று மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் இஸ்லாத்தின் எதிரிகளால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகும்....'
'....அந்தக் கொள்கைக்கு ஒரு நாடு கிடைத்தமை தன் செல்வாக்கை அதிகரிக்கச் செய்துள்ளது....'
'....அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் இஸ்லாத்தைத் தழுவியதாகப் பாசாங்கு செய்து அறியாத மக்களை ஏமாற்றி உருவாக்கியதே ஷீஆயிஸம் ஆகும்...'
'....அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) தனது 23 வருடப் போராட்டத்தின் மூலம் 'ஹை உம்மத்' என அல்குர்ஆன் வர்ணிக்கும் ஒரு முன்மாதிரி மிக்க உன்னத சமூகத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார்கள். உலகிற்கே தலைமைத்துவத்தை வழங்கக் கூடியதாக இருந்தது அந்த சமூகம். ஆனால்இ ஷீஆக்களோ நபிகளாரின் இந்த உன்னதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கருதுகிறார்கள். அலி (ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு)இ அம்மார் பின் யாஸிர் (ரழியல்லாஹு அன்ஹு) போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஸஹாபிகளைத் தவிர ஏனைய நபித்தோழர்கள் அனைவரும் காபிர்களும் முனாபிக்களுமாவர் என்பதே ஷீஆக்களின் அபிப்பிராயமாகும்!!!'
ஷீஆக்கள் பேசும் ஒற்றுமை பற்றி....
'....புரட்சியின் முன்னணித் தலைவர்கள் உலக முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி உரத்த குரலில் பேசினர். ஆனால்இ புரட்சி நடந்த சில காலத்திற்குள்ளேயே தமது புரட்சி வெறும் ஷீஆயிஸத்தை நிலைநாட்டுவதற்கான புரட்சி என்பதை ஈரானியர்கள் நிரூபித்து விட்டனர். முழு இஸ்லாமிய உலகையும் தமது தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுவர்கள் செயல்பட்டனர். உலகின் நாலா புறங்களிலும் ஷீஆயிஸத்தை மேலும் வேரூன்றச் செய்வதன் மூலம் மட்டுமே தமக்கு நிரந்தர ஆதரவாளர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர்கள் உறுதியாக நம்பினர்....'
'....இந்த வகையில் தமது குழுவுக்கு ஆள் சேர்ப்பதற்காக பணத்தை எங்கும் நீராக இறைத்தனர். ஷீஆப் பணத்தில் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அச்சகங்கள் உருவாகின. பவுன்டேஷன்கள் தோன்றின...'
ஸஹாபாக்கள் மீதான அவதூறு பற்றி...
'....அல்லாஹ்வின் தூதரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற புனித ஸஹாபாக்கள் மீதும் அன்னாரின் துணைவியர் மீதும் அவதூறு கிளப்புவதன் விளைவு என்ன...?'
'....இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமான சுன்னாவில் களங்கம் ஏற்படுத்துவதாகும். எனவேஇ ஷீஆப் பிரசாரத்தால் கவரப்பட்டவர்கள் புனித ஸஹாபாக்களினால் அறிவிக்கப்பட்டு ஸஹீஹான கிரந்தங்களான ஸஹீஹுல் புகாரிஇ ஸஹீஹ் முஸ்லிம் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களை நம்புவதற்குத் தயாராக இல்லை. மாற்றமாகஇ அப்துல்லாஹ் இப்னு ஸபா எனும் யூதனாலும் வனது ஆதரவாளர்களாலும் இட்டுக்கட்டப்பட்டு இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களின் பெயரால் தொகுக்கப்பட்டவற்றை மட்டுமே அவர்கள் நம்பத் தயாராக உள்ளனர்...'
ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது பற்றி...
'....நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால்இ உலகமெங்கும் சுன்னிகளுக்கு மத்தியில் ஸஹாபாக்களைப் பற்றி மோசமான பிரசங்கங்களைச் செய்து புதிய குழுக்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்து வரும் ஷீஆக்கள் இதற்கு எதிராக ஆலிம்கள் கிளர்ந்தெழும் சந்தர்ப்பங்களில் மெரிக்கப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சிப்பதாக பிரசாரம் செய்வதுதான். முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்க முயற்சிக்கிறார்கள் இவர்கள்...'
ஜமாஅத் ஷீஆயிஸம் பற்றி எழுதிய இதுபோன்ற செய்திகள் மிகவும் தெளிவானவை. எனினும்இ காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கண்களுக்கு மாறாகஇ ஜமாஅத்தே இஸ்லாமிதான் ஷீஆயிஸத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தது என நாளைக்கும் அவர்கள் கொக்கரித்துக் கொண்டுதானிருப்பார்கள்.
கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்களின் கட்டுரையைப் பற்றி அவர்கள் ஊதுகுழல் வைத்து ஓலம் எழுப்புகிறார்களல்லவா? அதையும் அவர்கள் வாசித்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்தக் கட்டுரை பிரசுரமானதன் பின்னணியே ஷீஆயிஸம் பற்றி யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் எகிப்து சென்றிருந்தபோது ஊடகவியலாளர்கள் மத்தியில் வெளியிட்ட கடும் கண்டனங்கள்தாம்....
அந்தக் கண்டனங்களை ஆட்சேபித்து ஈரானின் 'மஹ்ர்' செய்தி ஸ்தாபனம் யூஸுப் அல்கர்ழாவியை அவமானப்படுத்தும் வகையில் கேவலமாக விமர்சித்திருந்தது. அந்த விமர்சனத்துக்கு யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் எழுதிய பதிலையே அல்ஹஸனாத் 2008 ஒக்டோபர் இதழ் பிரசுரித்திருந்தது.
எகிப்தில் அவர் வழங்கிய பேட்டி பற்றி அவர் கூறுகிறார்:
'....அப்பேட்டியில் ஷீஆக்களின் ஆபத்தான இரண்டு விடயங்கள் குறித்து நான் எச்சரிக்கை செய்திருந்தேன். ஒன்று அவர்கள் ஸஹாபிகளைத் தூற்றுவது இரண்டாவது சுன்னி முஸ்லிம்களை ஷீஆச் சிந்தனை கொண்டு மூளைச் சலவை செய்வது...'
'....அவர்களிடம் இதற்கென பில்லியன்கணக்கான பணம் இருக்கிறது. பயிற்றப்பட்ட மனித வளத்தையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எனினும்இ இந்த மூளைச் சலவையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சுன்னி முஸ்லிம்களிடம் ஏற்பாடுகள் இல்லை...'
'....இதுதான் ஈரானிய செய்தித் தளத்தை ஆத்திரமடையச் செய்து என்னைப் பற்றிக் கண்மூடித்தனமான அவதூறுகளை வெளியிடச் செய்துள்ளது....'
கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் ஷீஆக்களை விமர்சித்து அடிவாங்கிய கதைதான் அது. எனினும்இ ஷீஆக்களைப் பாராட்டி அவர்களிடம் இருந்து பரிசு பெற்ற கதையாக இந்தக் காழ்ப்புணர்வு கொண்ட அவர்கள் அதனைத் திரிபுபடுத்திக் கூறுகிறார்கள்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல குறைகளையே தேடும் குணமுடையவர்களுக்கு அபாண்டங்களைத் தவிர வேறு ஒன்று எப்படி வரும்? அது இல்லாமல் அவர்கள் உயிர் வாழ முடியாது.
இது இவ்வாறிருக்கஇ ஷீஆக்களின் மூன்று கோஷங்கள் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டோம் அல்லவா? அவை தொடர்பில் மேலும் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும். அவைதாம்...
1. ஷீஆப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று முழங்கியமை.
2. முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை பற்றி உரத்துப் பேசியமை.
3. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் ஒரே இஸ்லாமிய நாடு எனத் தம்பட்டம் அடித்தமை.
இந்தக் கோஷங்கள் அனைத்தும் போலியானவை என்பது வெட்ட வெளிச்சமாகுவதற்கு நீண்ட காலம் செல்லவில்லை.
புரட்சி நடந்த சிறிது காலத்திற்குள்ளேயே அது இஸ்லாமியப் புரட்சியல்ல ஷீஆப் புரட்சியே என்பதை உலகம் கண்டு கொண்டது.
அவர்கள் கோஷமிட்டது போல் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமைக்கு அவர்கள் எந்தப் பங்களிப்பையும் செய்ய வில்லை. மாறாகஇ ஷீஆயிஸத்தை வளர்க்கவே உலகெங்கிலும் அவர்கள் பணத்தை வாரி இறைத்தார்கள்.
அமெரிக்காவின் மேலாதிக்கத்தோடு சொற்போர் நடத்தினார்களே தவிரஇ அமெரிக்காவுக்கு எதிராகவோ இஸ்ரேலுக்கு எதிராகவோ காத்திரமான எந்த செயற் திட்டத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. மாறாகஇ அந்த சக்திகளோடு அவர்கள் கைகோர்த்திருப்பதையே இன்றைய மத்திய கிழக்கு நடப்புகள் அபடம்பிடித்துக் காட்டுகின்றன. இந்தக் கள்ளக் காதல் தொடர்பு பற்றி 'அமெரிக்கா ஈரானைத் தாக்குமா?' என்ற தலைப்பில் அல்ஹஸனாத் 2012 நவம்பர் இதழ் பிரசுரித்திருந்த கட்டுரை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்தப் போலிக் கோஷங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்தாலும்இ புரட்சியின் ஆரம்ப நாட்களில் அவற்றை உண்மை என்றே அதிகமானோர் நம்பினர். காரணம் இஸ்லாமிய உணர்வுள்ளவர்களை இந்தக் கோஷங்கள் ஈர்க்கவே செய்யும்.
அந்த வகையில்தான் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் மூவரும் ஈரானை ஆதரிக்க முற்பட்டனர். அவர்களும் ஷீஆயிஸத்தால் கவரப்பட வில்லை. மாறாகஇ இந்தப் போலிக் கோஷங்களால் கவரப்பட்டவர்களே. எனினும்இ ஜமாத்தின் முன்னாள் அமீர் மௌலவி ஏ. எல். எம். இப்றாஹீம்இ முன்னாள் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆசிரியர் போன்றோர் ஜமாத் அங்கத்தவர்களுக்கு ஷீஆயிஸத்தைப் பற்றி விரிவாக விளக்கம் தந்து ஜமாத்தை அந்த வழிகெட்ட கொள்கையிலிருந்து பாதுகாத்தனர். அதனால் இன்று அவரை ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவர் கூட ஷீஆ வலையில் சிக்கும் பாயம் ஏற்படவில்லை. சிலரைப் பணம் கொடுத்து வாங்கும் ஷீஆக்களின் முயற்சிகூட அவ்வேளை நடைபெற்றிருக்கிறது. எனினும்இ விலை போகாதளவு அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளில் உறுதியாகவே இருந்தனர் இன்னும் இருக்கின்றனர். அத்தகைய ஒருவரைக் கூட ஜமாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களால் சுட்டிக்காட்ட முடியாது.
இன்று ஷீஆக் கோட்பாட்டின் பிரசாரகர்களில் ஒருவர் என விமர்சிக்கப்படும் மௌலவி இஸ்ஹாக் ஜமாத்அதின் ஓர் அங்கத்தவராக எப்போதும் இருந்ததில்லை. அவர் ஜமாஅத்தின் ஒரு குர்ஆன் மத்ரஸாவில் வேலை செய்தவர் மட்டுமே. இன்றும் கூட ஜமாஅத்தின் நிறுவனங்களில் ஜமாஅத்தைச் சாராத பலர் வேலை செய்கிறார்கள் என்பது வெளிப்படை.
இன்று ஐ.எஸ். தீவிரவாதிகளின் போலி ஜிஹாத் பிரகடனத்தால் கவரப்பட்டு ஐ.எஸ். இன் சூழ்ச்சி வலையில் உலக முஸ்லிம்கள் பலர் சிக்கியிருப்பது போல் என்று ஈரானின் போலிக் கோஷங்களால் கவரப்பட்டு இஸ்லாமிய உம்மத்தின் ஒரு நல்ல எதிர்காலத்தை பலரும் கற்பனை செய்தனர் எதிர்பார்த்தனர். எனினும்இ அவை வெறும் கோஷங்கள் என உணரப்படும் அவரையே அது நீடித்தது. ஒரு நல்ல மாற்றம் யாரால் வந்தாலும் அதனை ஆதரிப்பது ஒரு பொது நடைமுறை. மைத்திரி அணியை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஒரு நல்ல மாற்றம் கருதி இலங்கை முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லையா?
இன்று இன நல்லிணக்கத்திற்காக பௌத்தஇ இந்துஇ கிறிஸ்தவ அமைப்புக்களோடு நாம் இணைந்து வேலை செய்வதில்லையா? அதன் பொருள் இணைந்து வேலை செய்பவர் பௌத்தராகி விட்டார் என்பதா? அல்லது இந்துவாகி விட்டார் என்பதா?
எனினும்இ அந்த வகையில்கூட ஜமாஅத் ஈரானுக்காகவோ தன் நலனுக்காகவோ களமிறங்கிப் பிரசார வேலைகளில் ஈடுபடவோ ஆதரவு திரட்டவோ என்றும் முயற்சித்ததில்லை. அதற்கான வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. அதனால் தான் உறுதியாகக் கூறுகிறோம்இ ஈரான் ஆதரவு நிலைப்பாட்டுக்கு ஒருவர்கூட வரும் நிலை ஜமாஅத்தில் உருவாகவில்லை ஆரம்ப நாட்களில் வெளியேறிய மூவரைத் தவிர.
இன்று ஷீஆ முகத்தை மூடியிருந்த அனைத்துத் திரைகளும் கிழிந்து விட்டன. போலிக் கோஷங்கள் அம்பலமாகி விட்டன. அப்பட்டமாக சுன்னி முஸ்லிம்களை அழிக்கும் அக்கிரம சக்தியாக எதிரிகளுடன் கைகோர்த்து செயல்பட ஷீஆக்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு கடமை இருக்கிறது. இனஇ மத நல்லிணக்கத்திற்கான ஓர் அரசு பதவியிலிருக்கும் நேரம் இது. இலங்கை ஈரான் இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுப்பதில் எமக்கு இரண்டு கருத்துக்கள் இல்லை. எனினும்இ இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரத்தில் ஈரான் தலையிடுவது தொடர்பில் தமது ஆட்சேபணையை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஈரானின் இத்தகைய தலையீடுகளுக்கெதிராக பிரசாரம் செய்யும் உரிமை இலங்கை முஸ்லிம்களுக்குண்டு என்பதையும் தனை சாத்வீகமாகச் செய்வதன் மூலம் எமக்குள்ள மத உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நாம் முயல்கிறோம் என்பதையும் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நிலைப்பாட்டை இலங்கையும் ஜப்பானும் மற்றுமொருவகையில் பேணி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் பௌத்த நாடுகள். இராஜதந்திர உறவுகளை சிறப்பாகப் பேணிவரும் இந்நாடுகள்இ 'தேரவாதம்' 'மஹாயானம்' எனும் இரு பௌத்த பிரிவுகள் விடயத்தில் 'உங்களுக்கு உங்களது மார்க்கம் எங்களுக்கு எங்களது மார்க்கம்என்ற நிலைப்பாட்டைப் பேணி வருகின்றன.
இந்த நிலைப்பாட்டைப் பேணுவதற்கு ஈரானை நிர்ப்பந்திக்கும் பொறுப்பு இலங்கை முஸ்லிம்களுக்குண்டு என்பதை நாம் உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறானதொரு முயற்சியை விட்டு விட்டு ஷீஆக்களை மகிழ்விக்கும் உட்பூசல்களில் சமூகத்தைச் சிக்க வைப்பதிலேயே பலர் இன்று ஈடுபடுகின்றனர். அவர்களால் ஷீஆஇஸம் வளருமே தவிர தேயாது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்இ அமீர் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி