அலெப்போ நகரில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றம்

NEWS


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.

இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் முயற்சி மேற்கொண்டன.

அதன்படி, அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து அலெப்போ நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த பேருந்துகள் நேற்று நகருக்குள் சென்றது. 

இந்நிலையில், சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ள, அலெப்போ நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளில் வெளியேற்றப்பட்டு உள்ளனர். செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டியின் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

அலெப்போ நகரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கும் மேல் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

அலெப்போ நகரில் இருந்து இதுவரை 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத் துறை மந்திரி மெவ்லட் கவுசோக்லு தெரிவித்தார்.

கிழக்கு அலெப்போ நகரில் இருந்து 50 குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதில் சிலர் படுகாயம் அடைந்திருந்ததாகவும் ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top