இலங்கை முஸ்லிம்களாகிய நாம் எமக்கான இருப்பினை உறுதி செய்யும் எந்தவொரு திட்டத்தையும் தேர்தல் காலங்களில் ஆவணங்களாக சமர்ப்பித்து அதனை ஒரு டிமாண்டாக வேட்பாளர்களிடம் கேட்கவில்லை, மாறாக எங்கள் பகுதியில் அரசியல் செய்ய இத்தனை இலட்சம் தேவை எங்கள் ஊர் இளைஞர்கள் ஒரு தொகையினருக்கு அல்லது எங்களுக்கு (பிரச்சாரகர்) தொழில்வேண்டும் அப்படி தந்தால் மாற்றுக்கட்சிக்காரரை இந்த ஊருக்குள் வரவிடாமல் செய்வோம் அடித்து துரத்துவோம் என்று டிமாண்ட் பேசுவது இதுான் நாங்கள் கேட்பது.
இதுவல்ல இலங்கை முஸ்லிம்கள் செய்யவேண்டிய அரசியல் எங்களுக்கு தேவையான இருப்பினை உறுதி செய்யும் உரிமைகளை சரிவர பெற்றுக்கொள்ளும் சிறந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். தகைமை சமூகம் சார்ந்து சிந்திக்க கூடியவராக அவர் இருக்க வேண்டும். வெறுமனே நமக்கு கிடைக்கும் பணத்திற்காக சமூகத்திற்கு எதிராக செயற்படலாகாகது.
அப்படி பணத்தினை முதலீடுகளை செய்யும் அரசியல் முதலகைள் எப்படி எங்கள் உரிமைகளை பெற்றுத்தருவார்கள்? எப்படி அவர்களிடம் எதிர்பார்ப்பது? அவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பார்கள் அதனை அவர்கள் இலாபமாக பெற வேண்டுமல்லவா? அதுவரைக்கும் பாராளுமன்ற கதிரைகளை அவர்கள் சூடாக்க வேண்டுமல்லவா? இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை.
தயவு செய்து எதிர்கொள்ள போகும் தேர்தலிலாவது தகுந்த வேட்பாளர்களை நிறுத்துங்கள், இல்லையென்றால் பழைய பல்லவிதான் அரங்கேறும்.