மனிதன் இன்று வித விதமாய் வண்ண வண்ணமாய் உடுத்து நெகிழும் ஆடைக்குத்தான் என்னே மவுசு! உண்மையில் ஆடை அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். ஆடை மட்டும் இல்லாதிருந்தால் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமின்றி போயிருக்கும்.
ஆதமுடைய மக்களே! நிச்சயமாக நாம் உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்கார ஆடைகளையும் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 7:26)
இலங்கை முஸ்லிம்களை பொறுத்தவரை பல்லின சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நமக்கு சவாலான ஒன்று காரணம் இவ்வாறான சூழ்நிலையில் நாம் இஸ்லாமிய சூறத்தோடு வாழ்ந்து காட்டுவதில்தான் எங்களின் தனித்தன்மையை காண்பிக்கலாம் அதை விடுத்து தமிழர்கள் கிறிஸ்தவர்கள், சிங்களவர்கள் போல நாம் இருந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையில் எந்தவித வித்தியாசமும் இருக்காது. பொதுவாக ஆடைகள் தான் ஒரு மனிதரை தீர்மானிக்கின்றது. அதுவும் பெண்களின் ஆடைகள் இச்சையை துாண்டும் வகையில் இருந்தால் உடனடியாக அவளை அசிங்கமான பெண் என பச்சை குத்துகிறோம். இது அடிப்படையான விடயம்.
இலங்கையில் முஸ்லிம்கள் பெண்கள், சல்வார், சாரி என்று அணிந்தாலும் பெரும்பாலாக ஹபாயாக்களைதான் அணிகின்றனர். இந்த ஹபாயாக்களிலும் புதுவித பல பேசன்கள் வந்துவிட்டது. இன்று இந்த பேசன் காரணமாக ஹபாயாவின் அடிப்படை தன்மை இழந்து வி்ட்டது. எது அதன் நோக்கமோ அது இழக்கப்பட்டு விட்டது. ஜில்பாப், குர்தாப், டில்லி ஹாபாயா, சிலிம் ஹபாயா என்று ஆயிரம் வகை தொகை டிசைன்கள் இதுவெல்லாம் நாகரீகத்தின் அவல நிலை.
இவைகளை பரவாயில்லை என்று விட்டாலும் மெல்லிய துணியில் இறுக்கமாக புதுவகை ஹபாயாக்களையும் தலைக்கு மட்டும் சோலினை றெப்பிங் செய்து மார்பகங்களை காட்டுவதையும் உள்ளாடையின் நுணிவரை தெரியக்கூடிய ஹாபாயாவின் இறுக்கத்தையும் இன்று அணிவதை பார்க்க பார்க்க கூடியதாக இருக்கிறது. இது வீடுகளில் என்றாலும் பரவாயில்லை சுற்றுலா செல்லும் போது பொது இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது இப்படியான சம்பவங்களை காணக்கூடியதாய் உள்ளது. இவைகள் தடுக்கப்பட வேண்டும் ஹபாயாக்கள் வாங்கி கொடுக்கிற பொழுது அல்லது அணிகின்ற போது பாதுகாவலர்கள் கணவன்மார் இதனை பார்க்க வேண்டும். தயவு செய்து நமது முஸ்லிம் பெண்கள அன்னிய ஆண்கள் பார்த்து கொச்சையாக நினைக்கும் அளவுக்கு விட்டுவிடாதீர்கள்.