சிறப்பு அரசியல் செய்தியாளர் சஜீத்
அதாஉல்லாவின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமான ஒரு அரசியல் ஆதரவாளராக ஈடுபட்டவர்களில் தவமும் ஒருவர். அதன் காரணமாக தவம் மீது அதாஉல்லா நல்ல நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் கடந்த 2006ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தவத்தை களமிறக்கி 10129 (67.35%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெறச் செய்து 8 ஆசனங்களைப் பெற்றதுடன், அச்சபைக்கு தவிசாளராகவும் தவத்தை வைத்து அழகு பார்த்தார்.
அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளராகவிருந்த தவம் அதாஉல்லாவோடு நகமும் சதையமாகவிருந்து அவரின் அரசியல் நடவடிக்கைகளில் பிண்ணிப்பினைந்திருந்தார். இருந்தாலும் தவத்தின் செயற்பாடுகளில் அக்கரைப்பற்று மக்கள் திருப்தி கண்டிருக்கவில்லை அதாஉல்லாவின் அரசியல் அதிகாரத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கண்டதுடன் அதாஉல்லாவின் உச்ச அதிகாரத்தினூடாக அக்கரைப்பற்றில் மாநகர சபை ஒன்றினையும், பிரதேச சபை ஒன்றினையும் உருவாக்கும் சந்தர்ப்பமும் அதாஉல்லாவுக்கு கிட்டியது.
அதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலொன்றுக்கு 2011ஆம் ஆண்டில் முகங்கொடுக்க நேரிட்டது. அப்போது அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைகளிலும் அதாஉல்லா தலைமையிலான கட்சி குதிரைச் சின்னத்தில் தனித்து போட்டியிட ஆயத்தமானது. அக்கட்சி சார்பாக தவம் உட்பட இன்னும் பலரும் போட்டியிட்டனர். அப்போது அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது மேற்குறித்த இரண்டு சபைகளையும் கைப்பற்றியது. அத்தேர்தலில் தவமும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று மாநகர சபையில் 11821 வாக்குகள் பெற்று 8 ஆசனங்களையும், அக்கரைப்பற்று பிரதேச சபையில் 2261 வாக்குகள் பெற்று 6 ஆசனங்களையும் பெற்றனர்.
அக்கால கட்டத்தில் மேற்படி இரண்டு சபைகளுக்கும் யாரை தலைவர்களாக நியமிப்பது என்கின்ற சிக்கலான நிலையொன்றுக்கு அதாஉல்லா தள்ளப்பட்டிருந்தார். இருந்தபோதும் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்யிட்டு வெற்றி பெற்ற தவத்தை அக்கரைப்பற்று மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேயராக நியமிப்பதற்கு அதாஉல்லா என்னவில்லை காரணம் அத்தேர்தலில் தவம் விருப்பு வாக்கின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருந்தமையாகும். இதனால் அதாஉல்லாவுடன் நெருக்கமாக செயற்பட்ட தவம் சற்று தூரமானார். அதனைத் தொடர்ந்து தவம் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையப்போவதாகவும், பின்னர் மு.காவில் இணையப் போவதாகவும் செய்திகள் பரவிய வண்ணமிருந்தன.
இதுதொடர்பில் அதாஉல்லா செவிசாய்க்காமல் சற்று மௌனமாகவே இருந்தார். சிறிது காலம் சென்றதும் தவம் மு.காவிலே இணைந்துகொண்டார். மு. காவில் இணைந்துகொண்ட மறுகனமே அவர் அதாஉல்லாவை விமர்சிக்க தொடங்கினார். தவம் அதாஉல்லாவோடு இணைந்து செயற்பட்ட காலப்பகுதியில் மு. காவையும், அதன் தலைவரையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தமையை இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மறந்துவிடவில்லை ஆனால் அந்தவிடயங்கள் தவத்தின் உள்ளங்களையே உறுத்திக்கொண்டே இருப்பது வெளிப்படையான உண்மையாகும்..
குறிப்பாக மு. காவின் அரசியல் செயற்பாட்டை அக்கரைப்பற்றில் நசுக்குவதற்கும் மு. கா தலைவரின் அக்கரைப்பற்று விஜயங்களின் போது தடைகளை ஏற்படுத்துவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்களில் தவமும் பிரதான நபர் என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். அப்படியான ஒருவர் இன்று மு. காவையும் அதன் தலைமையையும் புகழ்ந்தும், அதாஉல்லாவை விமர்சித்தும் பேசுவது அரசியலுக்கான நாடகமே என்கின்றார் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மு. கா போராளி ஒருவர்.
குறிப்பாக அக்கரைப்பற்றின் மேயராக தன்னை அதாஉல்லா நியமிக்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே தவம் கட்சி மாறினார் என்பது முழு அக்கரைப்பற்று மக்களும் அறிந்து வைத்துள்ள பரகசியமாகும். ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப போராளி போல் தன்னை மக்களுக்கு காட்ட முனைவதும் ஊடகங்களில் அவதானிக்க முடிந்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் பலர் தவத்தினுடைய போக்கில் அதிருப்திகளையும் வெளியிட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகிறது.
ஆனால் இன்று தவம் அதாஉல்லா மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி போலி அறிக்கைகளையும் விமர்சனங்களையும் அள்ளிவைக்க முனைவது. அக்கரைப்பற்றில் மக்கள் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமாகவே கருதமுடிகிறது. தனக்கென்று ஒரு சொற்ப வாக்குகளை மாத்திரமே அக்கரைப்பற்றில் தன்னகத்தே கொண்டுள்ள அவர் சமகாலத்தில் அதாஉல்லாவையே இலக்கு வைத்து தனது முகநூலிலும், சில இணைய தளங்களிலும் விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
இதனால் அக்கரைப்பற்றில் தனக்கு ஆதரவொன்றினை திரட்ட முடியுமெ அவர் சிந்திப்பாரானால் அது வீணாகிப் போன விமர்சனமாகவே பார்க்க வேண்டியுள்ளதுடன், தவத்தினுடைய அரசியலின் முதலாவது வீழ்ச்சிப் பாதையாகவிருக்கிறது எனவும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குள்ளே பேசுகின்றனர்.
மு.காவோடு இணைந்த தவத்துக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை மு.காவின் தலைவர் ஹக்கீம் வழங்கியமை. அதாஉல்லாவை வீழ்த்தவேயன்றி அக்கரைப்பற்று மக்கள் மேல் உள்ள அரசியல் விசுவாசம் என்று யாரும் நினைத்திட வேண்டாம். மு.காவுக்கும், அக்கட்சியின் தலைமைக்கும் எதிராக தவம் செயற்பாட்டாரே என்பதனை ஹக்கீம் சற்றும் சிந்தித்துப்பாபாக்கவில்லை காரணம் ஹக்கீமுக்கு அதாவுல்லாவின் அரசியலை வீழ்த்தும் மருந்தாகவே தவத்தினைப் பார்த்தார். மாகாண சபை தேர்தலில் களமிறங்கிய தவம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் என்பதும் முக்கிய விடயமாகும்.
கடந்த மாகாண சபை தேர்தலில் தவத்துக்கு அக்கரைப்பற்று மக்கள் சொற்ப வாக்குகளை வழங்கினாலும், அம்பாரை மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கினர். அதற்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சியில் அதாஉல்லா மஹிந்தவோடு நெருக்கமாக இருந்ததும், அக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்ற இனவாத செயற்பாடுகளுமாகும். இருந்த போதிலும் ஏதோ ஒரு அடிப்படையில் தவம் வெற்றிபெற்றாலும் தவத்தினால் பெரிதாக அக்கரைப்பற்றிலும், அம்பாறையிலும் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவான தவம் தனக்கு வாக்களித்த மக்களால் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. மாகாண சபை உறுப்பினர்களுக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளில் கூட அவர் நீதமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டொன்றும் அவர் மீது சுமத்தப்படுகிறது. அவருடைய நிதிகளை அவருக்கு வாக்களித்த பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும்.
எனவே மீண்டுமமொரு தேர்தல் வருகின்ற போது அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என தவம் என்னுவது பகல் கனவாகும். இவ்வாறான நிலைமையினை கருத்திற்கொண்டோ என்னவோ அக்கரைப்பற்றில் ஆதரவை தேடிக்கொள்ள அதாஉல்லாவை தூசிக்க ஆரம்பித்திருக்கிறார் தவம் என்கிறார் தே.காவின் போராளியொருவர். இவ்வாறான போலி விமர்சனங்களுக்கு அக்கரைப்பற்று மக்கள் ஒருபோதும் செவிசாய்க்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதாஉல்லாவினுடைய அபிவிருத்தியைப் போல் ஒருவீதமும் கூட தவத்தினால் செய்ய முடியாது எனவும் அக்கரைப்பற்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இழப்பு என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அதாஉல்லாவின் இழப்பு அக்கரைப்பற்றுக்கு மாத்திரமல்ல முழுக் கிழக்கு மாகாணத்திற்குமான பேரிழப்பாகும். அடுத்து வரும் தேர்தலில் மக்களுடைய ஆதரவு யாருக்கு என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.