Headlines
Loading...
திருமண அழைப்பிதழ்களில் மட்டுமே இஸ்லாம் மார்க்கம் மீதமிருக்கிறது

திருமண அழைப்பிதழ்களில் மட்டுமே இஸ்லாம் மார்க்கம் மீதமிருக்கிறது



இலங்கையில் இன்று இஸ்லாம் மிகவும் பின்னடைவில் சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாய் உள்ளது, நமது வழி நபிவழி - நமது மார்க்கம் இஸ்லாம் ஓரே இறைவன் அவன் வல்ல அல்லாஹ் என்று நம்பிக்கை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களாகிய நாம் பெயரளவில் இருந்துவிடலாகாது.

நாம் இப்பூவுலகிற்கு வந்த நோக்கமே இந்த சத்திய மார்க்கத்தை உலகமெலாம் பரவச் செய்யவே அந்த பரவச் செய்தலானது நமது செயற்பாடுகளில்தான் தங்கியிருக்கிறது அதை விடுத்து வெறும் அரபு வார்த்தைகளில் அல்ல, அல்குர்ஆனை மற்ற மத நண்பர்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும் அதை விடுத்து அது துாரமான ஒன்று என்று கூறிவிடக்கூடாது காரணம் இதை அகிலத்தார் அனைவருக்கும் ஓர் அருட்கொடை.

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் மூலமாகவே இஸ்லாத்தை பரவச் செய்தார்கள், பசியோடும் பட்டிணியோடும் வாழ்ந்து இந்த புண்ணிய மார்க்கத்தை பரவச் செய்தார்கள் பாரிய யுத்தங்கள் செய்து எத்தனையோ சஹாபாக்களை இழந்தார்கள் இவை எல்லாம் எதற்காக சத்திய மார்க்கம் பரவச்செய்யவே.

ஆனால் இன்று இஸ்லாம் என்பது துாசாக கணிப்பிடப்பட்டு விட்டது, வெறும் பேச்சளவிலேதான் மார்க்கம் இருக்கிறது, மிம்பர் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கையில் ஒருகூட்டம் வெளியில் கைகட்டி சிரித்துக் கொண்டிருக்கிறது, இதுதான் அவர்களின் பயபக்தி பள்ளிவசால்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது, நம்மில் எத்னை ஏழைகள் பசியோடு வாழ்ந்து கொண்டிருக்கையில் நாம் உணவை கொட்டிவிடுகிறோம் இப்படி அடுக்கடுக்கான பல பிழைகள் ஏன் திருந்துவதற்கு முயற்சி்க்கவில்லை.

அப்படி ஒரு நிகழ்வுதான் திருமணங்கள் பொதுப்படையாக எமது திருமண வீடுகள் அனைத்தும் இன்று வேற்றுமத வீடுகளை போல ஆகிவிட்டது காரணம் பேசன் என்று மார்க்கத்தை மாற்றிவிட்டோம். மார்க்க அறிஞர் கலாமுல்லாஹ் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார்கள்,

இன்று திருமண அழைப்பிதழ்களில் மாத்திரம் துஆக்களும், அரபு வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளது, மாறாக முஸ்லிம்களின் மனங்களில் இருந்து அவைகள் அகற்றப்பட்டு விட்டது.

உண்மையும்தான், வெறும் அச்சிலும் பேச்சிலும் மாத்திரமே இன்று இஸ்லாம் மார்க்கம் இருக்கிறது எப்போது எங்கள் நடைமுறைக்கு இஸ்லாம் வருமோ அன்றுதான் அனைத்திற்கும் விடிவு.

பஹத் ஏ.மஜீத்.
பிரதம ஆசிரயர்